கட்டுரை

எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்

இரும்பைத்தான் காந்தம் கவரும். இனிமையால் கவர்ந்தவர், அன்பால் தன் மக்களின் ரத்தத்தின் ரத்தத்தில் கலந்தவர்.

நீதிக்குத் தலைவணங்கச் சொன்னவரிடம் நீதியே தலைவணங்கியது எனலாம்.

தாய்க்குத் தலைமகனிடம் தாய்க்குலங்களே எங்கள் வீட்டுப்பிள்ளையாக்கிக் கொண்டனர் இவரை.

 » Read more about: எனதுப் பார்வையில் பொன்மனச் செம்மல்  »

புதுக் கவிதை

தன்னம்பிக்கை

துளைக்கப் பட்டோமென்று
துவளவில்லை மூங்கில்கள்!
மாலையில் வீழ்வோமென்று
மலராமல் இல்லைமலர்கள்!

வீழ்ந்து விட்டோமென்று
விருட்சம் ஆகாமலில்லை விதைகள்!
சிதைக்கப் பட்டோமென்று
சிலைகள் ஆகாமலில்லை
பாறைகள்!

 » Read more about: தன்னம்பிக்கை  »

ஹைக்கூ

சிறுவரிக் கவிதைகள்

மண்ணில் புதைந்தாலும்
விண்ணோக்கி எழுவோம்
விதைகள்!

மறு பிறப்பெடுத்த மகிழ்ச்சி,
எழுத்தாளன் முகத்தில்!
புத்தக வெளியீடு!

மூச்சைவிற்று
வாழ்க்கை நடத்துகிறான்
பலூன்காரன்!

 » Read more about: சிறுவரிக் கவிதைகள்  »

புதுக் கவிதை

அன்புத் தோழி

நிறத்தைப் போலவே
மனமும் வெள்ளை என்றவளே! – அதில்
கரும்புள்ளியை வைத்துவிட்டு
எங்கே சென்றாய்?

தேனினும் இனிமை
குரல் என்றவளே!
அதைக் கசப்பாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?

 » Read more about: அன்புத் தோழி  »

புதுக் கவிதை

அம்மா…!

மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி:

மங்காத ஒளியாக,
அணையாத நெருப்பாக,
களையாத மேகமாக,
ஓயாத அலையாக,
நிற்காத தென்றலாக,
மறையாத சூரியனாக,

 » Read more about: அம்மா…!  »

புதுக் கவிதை

புதுமைப்பெண்

அரசுப்பொதுத் தேர்வில்
மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில்
மாணவிகள் மரணம்!

பலகலை நிகழ்ச்சிகளில்
மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக் காதலால்
மாணவிக்கு அரிவாள்வெட்டு!

 » Read more about: புதுமைப்பெண்  »

புதுக் கவிதை

புன்னகைக்கிறேன்!

சிலநினைவுகள் எழும்போது
குரோதம் கொள்கிறேன்,
இன்னும்சில நினைவுகளோ
என்கண்களை நனைக்கின்றன!

மறக்க நினைக்கும் நினைவுகள்
என்னைத் தினமும்
நினைக்கச் சொல்கின்றன!

 » Read more about: புன்னகைக்கிறேன்!  »