மண்ணில் புதைந்தாலும்
விண்ணோக்கி எழுவோம்
விதைகள்!
மறு பிறப்பெடுத்த மகிழ்ச்சி,
எழுத்தாளன் முகத்தில்!
புத்தக வெளியீடு!
மூச்சைவிற்று
வாழ்க்கை நடத்துகிறான்
பலூன்காரன்!
கசக்கிப் பிழிந்தாலும்
கை மணக்கச் செய்வோம்
பூக்கள்!
எவ்வளவு மது அருந்தினாலும்
யாருக்கும் கஷ்டங்கள் கொடுக்கமாட்டோம்
வண்டுகள்!
கடலில் முகம் பார்த்தால்
கரைக்கு இழுத்துச்
செல்கின்றன அலைகள்
நிலா!
குடியிருந்ததை,
கூடுகட்டி வாழ்ந்ததை
கண்டுகொள்ளாமல்
செல்கின்றனவே பறவைகள்
பட்டமரம்!
என்னைப் புதைத்து
உன்னை உயர்த்துவேன்! (மரங்களிடம்)
வேர்கள்!