துளைக்கப் பட்டோமென்று
துவளவில்லை மூங்கில்கள்!
மாலையில் வீழ்வோமென்று
மலராமல் இல்லைமலர்கள்!

வீழ்ந்து விட்டோமென்று
விருட்சம் ஆகாமலில்லை விதைகள்!
சிதைக்கப் பட்டோமென்று
சிலைகள் ஆகாமலில்லை
பாறைகள்!

சேகரிக்கும்தேன் தனக்கில்லையானாலும்
சேர்க்காமல் இருப்பதில்லை தேனீக்கள்!
விளைந்ததும் வெட்டப்படுவோம் என்றாலும்
விளையாமல் இருப்பதில்லை பயிர்கள்!

தோல்விகள்,
சோதனைகள்,
ஏமாற்றங்கள்,
தடங்கல்கள், எதுவாகிலும்
தன்னம்பிக்கை கொள்!

மாற்றம்வரும்
மகிழ்ச்சி பெறும்,
வழிகள் பலவுண்டு
வாழ்க்கை வாழ்வதற்கே!