சிலநினைவுகள் எழும்போது
குரோதம் கொள்கிறேன்,
இன்னும்சில நினைவுகளோ
என்கண்களை நனைக்கின்றன!
மறக்க நினைக்கும் நினைவுகள்
என்னைத் தினமும்
நினைக்கச் சொல்கின்றன!
நினைக்க வேண்டியவைகள்
அடிக்கடி தொலைகின்றன!
கரைதொட்டுச் செல்லும்
அலைகள்போல்
என் மனம்தொட்டுச் செல்லும்
சிலநினைவுகள்,
விடைகள் இல்லாத
விடுகதைகளாக சில நினைவுகள்,
முடிவில்லாத
தொடர்கதைகளாக பலநினைவுகள்,
சில நேரங்களில்
சிற்றாறுகள்போல்,
பல நேரங்களில்
பாழ்கிணறுகள்போல்,
சுழலும் ஆழிப்
பெருங்கடல்களாகவும்
அலைக்கழிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறேன்!
இருந்தாலும் பயணிப்பேன்,
நம்பிக்கையென்னும் துடுப்புகளால்
நங்கூரம் கொண்டுள்ளேன் நெஞ்சில்!
நீந்திக்கடப்பேன்
நினைவுகளைத் தோற்கடிப்பேன்!