மரபை இழக்காதே மானிடா!

என்னை என்றும் இகழ்ந்தாலும் ஏற்றுக் கொள்வேன் மகிழ்வுடனே அன்னைத் தமிழின் மரபைத்தான் அவச்சொல் சொல்லிப் பேசிட்டால் கன்ன மிரண்டும் வீங்கிடுமே கனிந்த நட்பும் பிரிந்திடுமே! மரபின் மாண்பைப் புரியாது மதியி ழந்தே ஏசாதீர் சிரத்தில் ஏந்தா  விட்டாலும் சீர்தான் கெட்டுப் பேசாதீர் மரத்தில் அடித்த ஆணியைப்போல் மனதின் அடியில் பதிந்திடுமே சரமாய்க் கோபம் வந்தேதான் சவுக்காய் வார்த்தை நீண்டிடுமே! மரபேக் கவியின் தாயல்லவா மறுத்தால் வருமே நோயல்லவா மரபை மதித்தால் Read more

பெண் தொழிலாளி

கூந்தலினைப் பின்னிப்போட்டவள் கூடதடுக்கையையும் பின்னுறாள். ஆசையாகப் பின்னும் எதிலுமே ஆனந்தம் பொங்கி வழியுமே! உழைத்துக் கருத்துப்போனவள், உள்ளம் வெளுத்துப்போனவள். கள்ளமில்லா நெஞ்சத்தில் ;நாளும் கருணைமழைப் பொழிபவள். வெள்ளைச் சிரிப்பு இவளது உள்ளம்தன்னைக் காட்டிடும். செய்யும் தொழிலைத் தெய்வமாய் ஐயமின்றி நம்பும் தேவதை . வருமானத்தில் வாழ்க்கையை வளமாகவே நடத்திடுவாள். ஏழை இவளின் சிரிப்பிலே இறைவன் இருப்பதை நம்புவோம். கோழை உள்ளம் மாறவே கொடுத்துப் பணியும் ஆற்றுவோம். இருப்பதை வைத்துப் பெருமையாய் Read more

நம்தோழர்!

(பாவகை: கலித்துறை) மழைவளம் வேண்டி மண்ணுழவு காக்கும் விவசாயி களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய் அழைப்பினை ஏற்று அவனியில் மாறிச் சென்றிடுங்கால் உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்! உலகினில் பஞ்சம் உணவதில் வராமல் காத்திடவோர் அலகென உழைப்பின் ஆற்றலைத் தருமோ ருன்னதமாய் நிலமதை உழுது நீக்கம றவுண வூட்டுகின்ற நலமிகுத் தொண்டு நாட்டிடும் உழவர் நம்தோழர்! ஆற்றினில் நீரும் ஆழமாய் வற்றும் துயர்களுடன் காற்றினில் ஈரம் கலங்கிடும் Read more

அடங்கி முடங்கி!

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா குறைபலச் சொல்லி குறைபடும் மாந்தர் கறைபட நாக்கு கசந்திடும் வார்த்தை தரையினில் கொட்டித் தளராமல் வீசி மறைதனை ஓத மறக்கும் நிலையும் கறையாமல் நின்று கசந்திடும் வாழ்வில் அறைதனில் சோர்ந்து அடங்கி முடங்கி பறையடி போலலையும் பற்பல எண்ணம் நிறைந்துதான் நெஞ்சினில் நிம்மதி போக்குவரே!

உயர்வென்ன தாழ்வென்ன!

(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா) பாடுபடும் கைகள் பகலவன் போலொளி கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம் ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய் ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்! நாடுகிற எண்ணத்தின் நம்பிக்கை கோள்களாய்க் காடுகரை வித்திட்டுக் காய்கள் பயிரிட்டு மேடுகளைச் சீர்செய்து மென்மையாகச் செப்பனிட்டு வாடுகிற மண்ணையும் வாழ்விப்போர் பாட்டாளி! உளமெல்லாம் வேண்டும் உணவுதனை ஆக்க தளமாக மண்ணினில் தானியங்கள் நட்டு வளமான நல்லுரம் வாஞ்சையுடன் தூவிப் பலந்தரும் காயும் Read more

உயர்(ஒளிர்)வாய்

வஞ்சித் தாழிசை தானாய் உழைத்து தேனாய் இனித்து மானாய்த் துள்ளி வானாய் உயர்வாய்.! மண்ணில்  மலர்ந்தாய் கண்ணாய்க் கற்று விண்ணை ஆண்டுப் பண்பில் உயர்வாய்.! துன்பம்  நீக்கி இன்பம்  கண்டு பொன்னாய் மணியாய் அன்பில்  உயர்வாய். — அலைபோல் உழைத்து வலையாய்ப் பின்னிக் கலைகள் கற்று மலையாய் உயர்வாய்.! நதிபோல் ஓடி விதியை விரட்டி மதித்து நடந்து மதியால் உயர்வாய்.! மலராய் மணந்து நிலவாய்க் குளிர்ந்து நலமாய் வாழ்ந்து உலகில் Read more

க(பெ)ற்ற அனுபவம்!

பாவகை: வஞ்சித் தாழிசை கூடம் அதிரும் சாடல் கேட்டு வேடம் கலைந்த பாடம் பெ(க)ற்றேன்! தேடி வந்து சாடித் தீர்த்தக் கேடிச் சொல்லில் கோடி பெ(க)ற்றேன்! ஆடு களத்தில் வாடும் உயிரைப் பாடு படுத்தும் கேடும் பெ(க)ற்றேன்! — சிகரம் ஏறி மகனும் ஒதுக்கி பகடி கொடுக்கும் தகனம் பெ(க)ற்றேன்! மமதை கொண்டு நமட்டுச் சிரிப்புக் கமழும் உறவில் எமனைப் பெ(க)ற்றேன்! ஊரும் பகைக்க சேரும் உறவில் யாரும் மதிக்காப் Read more

தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்

தென்றலினைத் தூதுவிட்டு தேன்தமிழை மோதவிட்ட அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன் அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு செவ்விதழைப் பூக்கவைத்து தேன்சுவையைத் தேக்கிவைத்து நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு – அது நல்வாழ்வில் திறக்கின்ற கதவு கதவு. பொன்கன்னம் சிவந்திருக்க புதுவண்ணம் சேர்ந்திருக்க என்எண்ணம் அதன்மேலே முத்தம் முத்தம் – அது எழில்வண்ணம் பெறவேண்டும் நித்தம் நித்தம். கண்மலர்கள் விழித்திருக்க கருங்குவளை பழித்திருக்க என்மனது ஏங்குதடி குயிலே குயிலே Read more

எங்கேயும் நீ

கடற்கரைக்கு சென்றால், அலையாய் நீ தெரிகிறாய்! பூந்தோட்டதுக்கு சென்றால், பூக்களாய் நீ தெரிகிறாய்! குளிக்கச் சென்றால் தொட்டியில் தண்ணீராய் நீ தெரிகிறாய்! ஏன்? இப்படி என நினைத்து, கோவிலுக்கு சென்றால் அங்கே நீ… எனது கடவுளாகத் தெரிகிறாய்! எங்கும் நீயாக இருக்கும்போது உனக்கு மட்டும் ஏன் என்னை தெரியவில்லை?