பாவகை20160425_1450: வஞ்சித் தாழிசை

கூடம் அதிரும்
சாடல் கேட்டு
வேடம் கலைந்த
பாடம் பெ(க)ற்றேன்!

தேடி வந்து
சாடித் தீர்த்தக்
கேடிச் சொல்லில்
கோடி பெ(க)ற்றேன்!

ஆடு களத்தில்
வாடும் உயிரைப்
பாடு படுத்தும்
கேடும் பெ(க)ற்றேன்!

சிகரம் ஏறி
மகனும் ஒதுக்கி
பகடி கொடுக்கும்
தகனம் பெ(க)ற்றேன்!

மமதை கொண்டு
நமட்டுச் சிரிப்புக்
கமழும் உறவில்
எமனைப் பெ(க)ற்றேன்!

ஊரும் பகைக்க
சேரும் உறவில்
யாரும் மதிக்காப்
பேரும் பெ(க)ற்றேன்!