கவிதை

நம்தோழர்!

(பாவகை: கலித்துறை)

மழைவளம் வேண்டி மண்ணுழவு காக்கும் விவசாயி
களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய்
அழைப்பினை ஏற்று அவனியில் மாறிச் சென்றிடுங்கால்
உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்!

 » Read more about: நம்தோழர்!  »

கவிதை

அடங்கி முடங்கி!

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா

குறைபலச் சொல்லி குறைபடும் மாந்தர்
கறைபட நாக்கு கசந்திடும் வார்த்தை
தரையினில் கொட்டித் தளராமல் வீசி
மறைதனை ஓத மறக்கும் நிலையும்
கறையாமல் நின்று கசந்திடும் வாழ்வில்
அறைதனில் சோர்ந்து அடங்கி முடங்கி
பறையடி போலலையும் பற்பல எண்ணம்
நிறைந்துதான் நெஞ்சினில் நிம்மதி போக்குவரே!

 » Read more about: அடங்கி முடங்கி!  »

கவிதை

உயர்வென்ன தாழ்வென்ன!

(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா)

பாடுபடும் கைகள் பகலவன் போலொளி
கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம்
ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய்
ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்!

 » Read more about: உயர்வென்ன தாழ்வென்ன!  »

கவிதை

க(பெ)ற்ற அனுபவம்!

பாவகை20160425_1450: வஞ்சித் தாழிசை

கூடம் அதிரும்
சாடல் கேட்டு
வேடம் கலைந்த
பாடம் பெ(க)ற்றேன்!

தேடி வந்து
சாடித் தீர்த்தக்
கேடிச் சொல்லில்
கோடி பெ(க)ற்றேன்!

 » Read more about: க(பெ)ற்ற அனுபவம்!  »