கூந்தலினைப் பின்னிப்போட்டவள்
கூடதடுக்கையையும் பின்னுறாள்.
ஆசையாகப் பின்னும் எதிலுமே
ஆனந்தம் பொங்கி வழியுமே!

உழைத்துக் கருத்துப்போனவள்,
உள்ளம் வெளுத்துப்போனவள்.
கள்ளமில்லா நெஞ்சத்தில் ;நாளும்
கருணைமழைப் பொழிபவள்.

வெள்ளைச் சிரிப்பு இவளது
உள்ளம்தன்னைக் காட்டிடும்.
செய்யும் தொழிலைத் தெய்வமாய்
ஐயமின்றி நம்பும் தேவதை .

வருமானத்தில் வாழ்க்கையை
வளமாகவே நடத்திடுவாள்.
ஏழை இவளின் சிரிப்பிலே
இறைவன் இருப்பதை நம்புவோம்.
கோழை உள்ளம் மாறவே
கொடுத்துப் பணியும் ஆற்றுவோம்.

இருப்பதை வைத்துப் பெருமையாய்
இவளி ருப்பதைக் காணுங்கள்
பொறுப்பாகப் பணியும் புரிந்து
புவிய னைத்தும் பேணுங்கள்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.