20160421_1749கடற்கரைக்கு சென்றால்,
அலையாய் நீ தெரிகிறாய்!
பூந்தோட்டதுக்கு சென்றால்,
பூக்களாய் நீ தெரிகிறாய்!
குளிக்கச் சென்றால் தொட்டியில்
தண்ணீராய் நீ தெரிகிறாய்!
ஏன்? இப்படி என நினைத்து,
கோவிலுக்கு சென்றால்
அங்கே நீ… எனது
கடவுளாகத் தெரிகிறாய்!
எங்கும் நீயாக இருக்கும்போது
உனக்கு மட்டும் ஏன்
என்னை தெரியவில்லை?