என்னை என்றும் இகழ்ந்தாலும்
ஏற்றுக் கொள்வேன் மகிழ்வுடனே
அன்னைத் தமிழின் மரபைத்தான்
அவச்சொல் சொல்லிப் பேசிட்டால்
கன்ன மிரண்டும் வீங்கிடுமே
கனிந்த நட்பும் பிரிந்திடுமே!

மரபின் மாண்பைப் புரியாது
மதியி ழந்தே ஏசாதீர்
சிரத்தில் ஏந்தா  விட்டாலும்
சீர்தான் கெட்டுப் பேசாதீர்
மரத்தில் அடித்த ஆணியைப்போல்
மனதின் அடியில் பதிந்திடுமே
சரமாய்க் கோபம் வந்தேதான்
சவுக்காய் வார்த்தை நீண்டிடுமே!

மரபேக் கவியின் தாயல்லவா
மறுத்தால் வருமே நோயல்லவா
மரபை மதித்தால் துதித்திடுவேன்
மாறாய் மறுத்தால் மிதித்திடுவேன்
மரபைத் தொழுதால் செருப்பாவேன்
மனதில் நிறுத்தி போற்றிடுவேன்
மரபும் தமிழும் ஒன்றல்லவா
மாண்பாய் வளரும் காத்திடவே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.