தம்பி… 2

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே
நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான்
சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை
பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.

தம்பி… 1

திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய்
இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய்
கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய்
துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.

தம்பி… அறிமுகம்

பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.

காதல் சங்கீதமே

உச்சந்தலை வருடி உரசும் காற்றில் அருகினில் வந்து உரையாடி உறவாகி வெட்கம் பூசி முகமது சிவக்க வில்லாய் வலைக் கரம் வளைத்து, பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி விரல் தீண்ட விரதமும் தீரும்! சுவாசக் காற்றே தேவை இல்லை மூச்சாய் என்னை சுமக்கும் அன்பே… மனம் தொடும் காதல் சங்கீதமாய் இயல் இசையை என்னுள் மீட்டுகிறாய்நீ !  

மலர்வனம் 8

ஹைக்கூ ஷர்ஜிலா ஃபர்வின் மழைத்துளிகளை சுமந்து கொண்டிருக்கும் கார்காலச் சிலந்தி வலை. இலையுதிர்காலக் கிளை தண்டுகளெல்லாம் மின்னுகிறது வைகறைப் பனி. வானத்தில் நாற்று நட கால்களைப் கவ்விப் பிடிக்கும் சேற்று வயல். நனைந்த சாளரக்கம்பிகளில் தொங்கும் அரை நீள்வட்டகளுக்குள் முன்பனிச் சூரியன்கள். பாய்மரப்படகு பயணம் செய்கிறது இளைப்பாரும் பறவை. மரத்தின் மேல் நீந்த குளத்தில் விலகிச் செல்கிறது நிலவு அஸ்தமனமாகும் சூரியனை கூறு போடும் மரக்கிளை தொங்கும் மழைத்துளி வடிந்து Read more

மலர்வனம் 7

ஹைக்கூ வஃபீரா வஃபி 01.தாவும் குரங்குநதியில் தலைமுழுகி எழும்மரக்கிளை 02.நண்பகல் வேளைசக்கரங்களிடை சிக்கித் தவிக்கும்வண்டி நிழல்  03.உயர்ந்த பாறைஓய்வெடுக்க முடியாமல் திரும்பும்கடலலைகள்.  04.காலை வெயில்யன்னல் திரையில் ஆடும்பூனையின் நிழல்.  05.குறி வைக்கும் கவண்சட்டென நகர்ந்து மறையும்மாலைச் சூரியன். 06.இலையுதிர்க்காலம்மரக்கிளை எங்கும் பூத்திருக்கும்கொக்குக் கூட்டம். 07.கொட்டும் அருவிகற்பாறையில் துவைக்கப் படும்பௌர்ணமி நிலவு 08.குளக்கரையில் முதியவர்கூடவே நடை பயிலும்ஒற்றை நாரை. 09.ஆற்றோரத் தென்னைஅங்குமிங்குமாய் நடை பயிலும்தென்னங்கீற்றின் நிழல். 10.கொள்ளை போன மணல்தேடி ஊருக்குள் Read more

வாழ்வி(ய)ல் வசந்தம்!

உள்ளிழுத்து வெளிவரும் – என் உஷ்ண மூச்சுக் காற்று இதயத்தின் ரணங்களை மொழிபெயர்க்கும்! என் வீட்டு ஜன்னல் கதவு என் மன ஓலத்தை எதிரொலிக்க ஒத்தாசை புரியும்! காயப்பட்ட என் நெஞ்சம் வேதனை தாங்காமல் விம்மித் துடிக்கும்! நித்திரை வராத நிலவுப் பொழுதுகளில் கண்கள் மட்டும் கண்ணீர் வடிக்கும்! செத்துப் போன என் வாழ்வு சில சொப்பனங்களால் மாத்திரம் தினம் நகரும்! யோசித்து வலிக்கும் என் உணர்வுகள் – எப்போது Read more

யாசக வாசலிலே…

இமைகள் வருடிய தாயும் எங்கே இதயம் தொட்ட உறவுகள் எங்கே இரக்கம் படைத்த நெஞ்சமும் எங்கே இளமை வளமை இன்பம் எங்கே..எங்கே…? தோளில் சுமந்த செல்வங்கள் எங்கே தேடியச் செல்வங்கள் போனதும் எங்கே ஓடி யாடி உழைத்த….தெல்லாம் தேடியும் பார்த்தேன் தெரியவில்லை. இங்கே.! ஆடி யடங்கும் வாழ்க்கை தனில் அன்பு பாசம் அனைத்தும் எங்கே..? முதுமை என்பதும் வேதனை தானோ முடங்கியே நினைவுகள் சுமக்க தானோ.! நெற்றியின் வியர்வை சிந்திய Read more

காடுகள்

காடுகள் – நம் வாழ்விடத்தின் கடைகால்கள் ஆனால்… நாம் தகர்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் – நம் உயிர்வளி சேமிப்பகங்கள் ஆனால்… நாம் செலவழித்து கொண்டிருக்கிறோம். காடுகள் – நம் உடலில் உயிராடைகள் ஆனால்… நாம் கிழித்துக்கொண்டு இருக்கிறோம். காடுகள் – நம் வாழ்க்கைப் படகுகள் அதிலே… நாம் துளை போட்டுக்கொண்டு இருக்கிறோம். காடுகள் பறவைகளின் வீடுகள் நாம் கலைத்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் மரங்களின் மாநாடுகள் நாம் பயனின்றி கூடிக்கூடி கலைந்து Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20 வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம். இது 3 ஆவது பாவகை மாமுன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் இவை வெண்பா நேர்முன்நேர் நிரைமுன் நிரை நேர் முன் நிரை நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா ஆனால் கலிப்பாவில் காய்முன் நிரை வரும் அதாவது கலித்தளை மிகுந்து வரும் மற்ற தளைகள் குறைந்து வரலாம் புளிமாங்காய் கருவிளங்காய் Read more