அறிமுகம்

நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

By Admin, ago
புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

By Admin, ago
மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

By Admin, ago
மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

By Admin, ago
நேர்காணல்

வேரும் விழுதுமாய் தமிழ் ஆலமரங்கள்

மின்னிதழ் / நேர்காணல்

தமிழ்நெஞ்சம் அமின் நேர்காணலில் –

பா. பாவேந்தன்

வணக்கம்!

சிறந்த தமிழறிவும் ஆங்கிலப் புலமையும் அரசியல் கூர்நோக்கும் உடையவராய்த் தங்களைத் தமிழ்நெஞ்சம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் தங்கள் நேர்காணலுக்குச் சில வினாக்களை முன்வைக்கிறேன்.

 » Read more about: வேரும் விழுதுமாய் தமிழ் ஆலமரங்கள்  »

By Admin, ago
மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »

By Admin, ago
ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்

மின்னிதழ் / நேர்காணல்

தமிழ் படித்தவர்களைவிட தமிழ் ஆசிரியர்களைவிட மற்ற துறைகளில் உள்ளவர்களே தமிழ்க்கவிதை யாப்பதில் வல்லவர்களாக உள்ளனர். ஒரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் உயர்பதவியில் இருந்து இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி ஓய்வு பெற்றவுடன் தமிழ்க் கவிதை மேல் கொண்ட பற்றின் காரணமாக அதனை யாப்பதற்கான வழிமுறைகளைக் கற்றுத் தேர்ந்து தற்போது மாணவராக மட்டுமின்றி ஆசிரியராகவும் மிளிரும் ஒரு வங்கி அதிகாரி.

 » Read more about: வங்கியிலிருந்து வந்ததொரு கவிதைப்புயல்  »

By Admin, ago
நேர்காணல்

தாய்ப்பாலே எல்லாம் தரும்… மருத்துவர் சாம்பசிவம்

மின்னிதழ் / நேர்காணல்

கும்பகோணம் சீனவாசா நகரில் உள்ள மரங்களெல்லாம் இவர்பெயரைச் சொல்லும். ஒவ்வொரு மரங்களிலும் ஒரு மருத்துவர் பெயர் இருக்கும். அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர் எனினும் தொடர்ந்து சமூக சேவைகளில் முன்னிற்பவர்.

 » Read more about: தாய்ப்பாலே எல்லாம் தரும்… மருத்துவர் சாம்பசிவம்  »

By Admin, ago