கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்

மின்னிதழ் / நேர்காணல் கரிசல்காட்டுக் கவிதைச்சாரல் கரிசல்காட்டு மண்ணில் பிறந்து ஏதுமறியாத பெண்ணாக வளர்ந்து திருமணமாகி இனிமையான திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது கணவரின் எதிர்பாரா மரணம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டாலும் தனது விடாமுயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி தனது மகனைத் தன் கணவர் ஆற்றிய காவல்துறைப்பணிக்கே அனுப்பி, தானும் ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக முன்னேறி Read more

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும், பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் பணியார்றிய தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா. இலங்கையின் முன்னோடி பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தவறாது இடம்பிடித்த ஒரு பெயர்தான் தியத்தலாவ Read more

பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி

மின்னிதழ் / நேர்காணல் முனைவர். சி.அ.வ.இளஞ்செழியன் ஒருவர் ஒரு திறமையில் சிறந்து விளங்குவதே அரிது. பல திறமைகளில் சிறந்து விளங்குவது அரிதிலும் அரிது. ஒருவர் ஓவியம் வரைகிறார். சிற்பக்கலையில் திறன் பெற்றுள்ளார். இசை ஞானம் உள்ளது. கட்டிடக்கலை ஆசிரியராக உள்ளார். பழங்கால சிற்பம் , ஓவியம் , இசை கட்டிடக் கலைகள் குறித்த ஆய்வு செய்கின்றார். ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுகின்றார். Read more

தமிழ்த்தொண்டாற்றும் மருத்துவச் செம்மல்

பொறியியலில் சேர்ந்த முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில இடம்கிடைத்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு மருத்துவப் படிப்பைக் கற்று சிறந்த மருத்துவர்களாக வலம் வருவதை நாம் காணலாம். அப்படிப்பட்ட மருத்துவரே இன்று நமக்கு நேர்காணல் வழங்க உள்ளார். ஆம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள மேடவாக்கம் கல்பனா பல் நோக்கு மருத்துவமனையின் நிறுவனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வாழ்நாள் சாதனையாளர் உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். தமிழ்க் கவிதைகளை சிறுவயது முதற்கொண்டு எழுதி வருபவர்.

முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன்

என்றும் வாழும் பாரதியார்

வலங்கையார் தொகுப்பும் வாழ்க
வாய்த்தநற் கவிகள் வாழ்க
கலங்கரை விளக்கம் போலக்
கைகளில் நூலும் வாழ்க
பலத்துடன் ஒருங்கி ணைந்தப்
பாவலர் கூட்டம் வாழ்க
நலத்துடன் தமிழின் ஊடே
நாளெல்லாம் வாழ்க வாழ்க

தமிழ்நெஞ்சம் அமின்

தஞ்சை மண்ணின் தன்னம்பிக்கை விண்மீன்

மின்னிதழ் / நேர்காணல் திருமதி புனிதா கணேசன் இன்றைய சமூகச்சூழலில் ஒரு பெண் தனியாக வாழ்வது என்பது சற்றே சிரமமான காரியம் தான்; அதுவும் கணவனை இளவயதில் இழந்த பிறகு தனியாகப் பயணிப்பது அவ்வளவு எளிதானதன்று; மேலும் ஒரு பெரிய நிறுவனத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக நடத்துவது என்பது மிகவும் கடினமானது. ஆனால் இவற்றை எளிதாகக் கடந்து வந்து Read more

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

முகநூல்குழுமங்களின் முன்னோடி

மின்னிதழ் / நேர்காணல்  முத்துப்பேட்டை மாறன் முகநூல் ஓர் இருபுறக் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதனைப் பயன்படுத்துவதைப் பொறுத்தே பலனையும் கெடுதலையும் தரும். முகநூலைத் தமிழ்வளர்க்கும் கருவியாகச் செய்யமுடியும் என்பதை ஒருவர் சாதித்துக் காட்டியுள்ளார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம் ஒருவர் சாதித்துள்ளார். இன்று பல்கிப் பெருகியுள்ள எண்ணற்ற முகநூல் குழுமங்களுக்கு முன்னோடியாக உள்ள நிலாமுற்றம் என்ற ஓர் அமைப்பை Read more

நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.