கவிதை
தம்பி… அறிமுகம்
நான்.
பேச்சில் தமிழே உயர்வாக பிறந்தேன் தஞ்சை மாவட்டம். மூச்சில் முழக்கம் தமிழாக. முயன்றேன் கற்க இலக்கணமே. வீச்சில் தமிழே உரையாக வீறு கொள்வேன் கவியரங்கம். தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே தேன்த மிழையே பரப்பிடுவேன். கற்றேன் தமிழை இனிதாக கனியின் சுவையை உணர்ந்தேனே. நற்ற வைச்சொல் வேன்நன்றாய் நம்த மிழின்வு யர்வினையே. பற்றெ னப்பற் றினேன்தமிழை. பாக்கள் வடித்தே மகிழ்ந்தேனே. உற்ற உறவாய் தமிழர்கள் உயர்வும் பெறவே உதவிடுவேன். கவியாய் மலர்ந்த சிந்தனைகள் கற்றால் வாழ்வில் உயர்ந்திடவே. கவிவி தைகவி தைநூலே. கற்றோர் வாழ்த்த மகிழ்ந்தேனே. செவியில் தமிழால் இன்புறவே சேவை என்றும் தமிழுக்கே. புவியில் இவனும் தமிழுக்காய் புரிந்தான் தொண்டு வாழ்த்திடவே. கவிஞர் கோவிந்தராசன் பாலு தொடரும்
