கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்!
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர் – அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!

மனத்தின் அவலம் குறைக்கவே அஞ்சும்
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! – நெஞ்சும்
சுவைக்கும் பொருளைச் சுரந்தவர் கம்பர்!
அவைக்கும் அவரே அழகு!

உயிர்கொடுத்த பாவலர் கம்பரே பாட்டால்
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார் – கேட்டாலே
அரும்பாக்கள் ஓதும் பொழுதினிலே போதும்
காதும் குளிரும் கமழ்ந்து!

கரவர்த்தி கம்பனைப் போற்ற கவிச்சக்
புவிமேல் புலரும் புதுமை! – தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே இன்பமாய்!
வாக்கும் மணக்கும் மலர்ந்து!

அலைந்து திரிந்தே அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து! கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம்! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!

அன்பினை நாளுமே பெற்றகம்பர் நாமகள்
வாழ்வினைக் கண்டிட ஆசையோ! – பாவினைப்
பாடும் மனமேநீ பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து!

கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து! – மலையின்ப
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ்!

கலைகள் அறுபத்து நான்கினையும் ஆய
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! – தேயவழி
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து!

கலைகளைக் கண்டெனத் தந்தருளும் கற்கும்
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! – அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு!

Categories: வெண்பா

1 Comment

நிறைமதி நீலமேகம், பெண்ணாடம் · ஜூலை 4, 2020 at 10 h 00 min

சிறப்பு, இனிய நல்வாழ்த்துகள் சகோதரி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.