யே ராசா ராசா…

இசைப்பாடல் யே ராசா ராசா என் நெஞ்சுக்குள்ளே வந்து நீயும் என்னை யென்ன யென்ன செய்யப் போகிறாய்? தினம் லேசா லேசா வந்து என்னைத் தொட்டு எங்கே நீயும் போகிறாய்? இது பருவம் தந்த காதல் மயக்கமோ? உன்றன் பார்வை யென்றும் என்னை மயக்குமோ? யே…..ராசா…. ராசா….. யே…..ராசா…. ராசா….. ____ (யே…..ராசா…. ராசா…..) மின்னல் போலெ முன்னே வந்து என்னை தொட்டுச் செல்லும் உன்னைக் கண்ணுக்குள்ளே வைத்து நானும் Read more

கம்பன் புகழைப் பாடு மனமே!

கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன் நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க விகர்ப்பம் தணியும் விரைந்து! விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்! நெஞ்சும் உரைக்கும் நினைவாளர் – அஞ்சாதே கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?! செம்பட்டுப் போன்றே செழிப்பு! மனத்தின் அவலம் குறைக்கவே அஞ்சும் கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! – நெஞ்சும் சுவைக்கும் பொருளைச் சுரந்தவர் கம்பர்! அவைக்கும் அவரே அழகு! உயிர்கொடுத்த பாவலர் கம்பரே பாட்டால் Read more

பாடு மனமே பாடு!

எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்     ஏந்தும் இசையளிக்கும் இன்பம்! பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்     போதும் இனியெதற்குத் துன்பம் ! இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை     என்றும் மனச்சுமையைப் போக்கும் ! அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும்      அமுதச் சுவையழகைத் தேக்கும் ! பாடும் குயிலுடனே பருவ மங்கையவள்     ஆடிக் கழித்திடுவாள் தினமே ! நாடி Read more

திருப்புகழைப் பாடு மனமே!

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்! எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம் திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில் உருப்பெற்று  வாழும் உயிர்! சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும்! மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும்! – தங்கத் திருப்புகழால் சிந்தைக்குள்  தேன்பாயும்! நாளும் பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு ! செந்தமிழ்க் காவலனைச்  சிந்தையுள் வைத்துப்பா முந்துதுவே இன்பத்துள்  மூழ்கடித்து! – கந்தன் அருள்பெற்று வாழ அனுதினம் பாடு! திருப்புகழால் தீரும் துயர் ! Read more

பாட்டுக்கோர் புலவன் பாரதி!

பாரதியார் போலிங்குப்  பாரினிலே  கண்டதில்லை வீரத்தில் யாமறிந்த  விற்பன்னன்! – ஏரெடுத்து இங்குளுதான் எம்மனத்தைத்  தங்கத் தமிழாலே! பொங்கட்டும்   இன்பப் பொழில்! போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார் ஏர்முனைக்(கு)  ஈடான என்றுமவன்! – கூர்விழிமுன் யார்வந்து நின்றாலும் யானை வலிமையென பாரதிக்கே கிட்டும் பரிசு! பொல்லாத  சாதிவெறி போனதெங்கே என்றறியார் எல்லாமும் எம்மறவன் பாட்டின்முன்! – நில்லாதே ஓடியதாம்!  என்றுமவர்   ஒப்பற்ற பாடலினால் தேடியிங்குத் தந்திட்டார்  தேன்! அச்சமின்றி நாம்வாழ Read more

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!

செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச் சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள் அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ! கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு கைவிர லாலெனை வென்றவ னே கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா கோடிச்சு கம்தரும்  மோகன மே! என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  – பொங்கும் இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே தன்னில் சரிபாதி என்றவ னே Read more

உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும் வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால் உள்ளத்திற் கஃதே உயர்வு! தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்! – நன்கறிவீர் கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல் உள்ளத்திற் கஃதே உயர்வு! குற்றம் இழைப்போர் குணங்கண்டு யாமாற்றும் நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும்! – கற்றவர்கள் தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால் உள்ளத்திற் கஃதே உயர்வு! எண்ணம் இனித்திட இன்னிசையை Read more

விழியாலே கதைசொல்லும்

பேச்சில் இனிமை வேண்டும் !

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில் …… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் ! தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித் …… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ ! ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும் …… உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் ! ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல் …… ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே ! கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு …… கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு ! உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் ! Read more

காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 

காற்றாய் என்னுள் வந்து போகிறாய்  காதல் கவிதைகள் தந்து போகிறாய்  நேற்றோடிந்த உறவு முடிந்ததா நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! … கொட்டும் மழையில் நியிருக்கக் குடைகள் வேண்டுமா நண்பனே ?… ஒட்டுத் துணிக்கும் வழியத்து இருக்க  உயிரைக் கொடுக்க வந்த நண்பனே … வறுமை போனது வசதியும் வந்தது அதுவும் உன்னாலே இன்று பொறுமை இழந்து – பொங்கி எழுகிறேன் அதுவும் உன்னாலே பழகித் திரிந்த காலம் உனக்கு Read more

கம்பன் புகழைப் பாடு மனமே !

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! – தேயவழி
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து!

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும்
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! – அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு!