வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்! – நன்கறிவீர்
கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

குற்றம் இழைப்போர் குணங்கண்டு யாமாற்றும்
நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும்! – கற்றவர்கள்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

எண்ணம் இனித்திட இன்னிசையை யாம்கேட்டால்
விண்ணைத் தொடுமுணர்வு விண்மீன்கள்! – கண்ணுள்ளே
துள்ளுகையில் துன்பங்கள் தூரப்போம் எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

ஆல்போல் தழைத்தே அறுகுபோல் வேரூண்ட
நால்வர் அருளிய நற்கருத்தைப் – பாலென்றே
அள்ளிப் பருகி அகத்தூய்மை பெற்றுவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தங்கத் தமிழிருக்கத் தாவுவதும் நன்றல்ல
இங்கிலீசு வாழ்வளிக்கும் என்றிங்கே! – எங்களினம்
வெள்ளைய ரின்தயவே வேண்டாமென் றிங்கிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

Categories: வெண்பா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.