காற்றாய் என்னுள் வந்து போகிறாய் 
காதல் கவிதைகள் தந்து போகிறாய் 
நேற்றோடிந்த உறவு முடிந்ததா
நெஞ்சே நெஞ்சைக் கேட்டுப் பாரடா! …

கொட்டும் மழையில் நியிருக்கக்
குடைகள் வேண்டுமா நண்பனே ?…
ஒட்டுத் துணிக்கும் வழியத்து இருக்க 
உயிரைக் கொடுக்க வந்த நண்பனே …

வறுமை போனது
வசதியும் வந்தது அதுவும் உன்னாலே
இன்று பொறுமை இழந்து – பொங்கி
எழுகிறேன் அதுவும் உன்னாலே

பழகித் திரிந்த காலம் உனக்கு
நினைவில் இல்லையா ?…
இரு பக்கம் கொண்ட கடிதம் எழுத
வெக்கம் இல்லையா ?…

உயிரைப் பிசையும் வார்த்தை ஜாலம்
உனக்குள் ஏதடா ?…
உணர்வைக் கொன்று பகையை வளர்க்கும்
உயிர் நண்பா சொல்லடா ?…

எருமைத் தலையன் பேச்சுக்கே தான்
தலையை ஆட்டுறாய் …
ஏனோ இந்த மாற்றம் தந்து
மனதை வாட்டுறாய் …

துயரக் கடலில் கப்பல் ஓட்டி
எங்கே செல்வேன் நான் ?…
துடுப்பாய் இருந்த நண்பன் இன்றித்
துலைந்தே போவேன் நான் …

மரணம் வந்து சேரும் முன்னால்
மனசை மாற்றடா …
என்  உலகம்  நீதானடா – அதை
என்றும் மறவேன் நான் தானடா …

நண்பா நண்பா நண்பா  -எங்கள்
நட்பைப் பாரடா …
அன்பாய்த் திரிந்த காலம் அழுகுது
அதையேனும் கேளடா …

சொல்லும் வரைக்கும் சொல்லிப்புட்டேன் 
சோகம் தானடா… 
எனைக் கொஞ்சம் அள்ளும் வரைக்கும்
அள்ளிக் கொள்ள வா ஆசை நண்பனே …