நேரிசை வெண்பா வகை
வண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை
வண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய்
எண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே
விண்ணுலகம் போற்றும் வியந்து
வண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும்
வண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே
விண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை
விண்ணுலகம் போற்றும் வியந்து
எண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும்
எண்ணியே நண்ணுக ஏந்திழை – எண்ணமே
விண்ணதி லேயொளிர் வெண்ணிலா போலென
விண்ணுலகம் போற்றும் வியந்து
மண்ணிலே மாதென மாண்புறு மன்னையை
கண்ணிலே காணுமோர் காயமாய்க் – காண்பதோ?
விண்ணுறை தெய்வமாய் வேண்டிட வுன்னையே
விண்ணுலகம் போற்றும் வியந்து
விண்ணிலா விஞ்சிடும் வண்ணமாம் பெண்மையை
வண்ணமாய் வாழ்வினில் வேண்டியே – கண்ணதாய்
ஒண்ணியே வாழ்வதில் உண்ணிடு அண்ணலை
விண்ணுலகம் போற்றும் வியந்து
1 Comment
புனிதா கணேசன் · நவம்பர் 16, 2016 at 22 h 27 min
மண்ணிலே மாதென மாண்புறு மன்னையை
கண்ணிலே காணுமோர் காயமாய்க் – காண்பதோ?
விண்ணுறை தெய்வமாய் வேண்டிட வுன்னையே
விண்ணுலகம் போற்றும் வியந்து –
என்ற பாவில் இரண்டாம் அடியை –
‘கண்ணிலே காணுமோர் கடவுளாய்க் – கண்டிடு’ என்று மாற்றுக.