புதுக் கவிதை

ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!

நற்கொள்கை வகுக்காமல்
அணியில் கூட்டலும்
கழித்தலும் அன்றாடம்
நிகழ்தலின் உச்சம்!

சொத்துக்களைக் குவித்தலும்
பெருக்கலுமே குறிக்கோளாய்
அரசியலார் கொண்டிருக்கும்
அவலநிலை !

காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும்
அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க…

 » Read more about: ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!  »

புதுக் கவிதை

அன்பிற்கு அடிமை ஆண்மகன்.!!!

ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!! பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான் எவ்வளவு பாசம். கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா? இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!! தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள் அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக. தம்பியும் கல்வியை கையில் ஏந்தி தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.

புதுக் கவிதை

செக்குச் சீமாட்டி!

 

 

 

கொக்காட்டிக் கொலுசாட்டிக்
கொஞ்சிக் கொச்சனை நீராட்டி …
கொப்பாட்டிக் குலையாட்டிக்
கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து
கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே …

 » Read more about: செக்குச் சீமாட்டி!  »

புதுக் கவிதை

ஞானமெது..?

இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான் .. !!

உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப் பகைக்கு
சூத்திரம் போதித்தான் ..

 » Read more about: ஞானமெது..?  »

புதுக் கவிதை

உருவமான உயிர்

பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…

பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…

இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…

 » Read more about: உருவமான உயிர்  »

புதுக் கவிதை

அன்புத் தோழி

நிறத்தைப் போலவே
மனமும் வெள்ளை என்றவளே! – அதில்
கரும்புள்ளியை வைத்துவிட்டு
எங்கே சென்றாய்?

தேனினும் இனிமை
குரல் என்றவளே!
அதைக் கசப்பாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?

 » Read more about: அன்புத் தோழி  »

புதுக் கவிதை

மெய்யும் பொய்யும்

முஹம்மட் றாபி

தையும் மார்கழியும்
மாறி மாறி,
வயதுகள் நெய்யும்.

தாயும் ‘ஆ’ வும்
பருகத் தர,
காயும் கனியும்.

கனியக் கனிய
இளமைப் பழங்களை,

 » Read more about: மெய்யும் பொய்யும்  »

புதுக் கவிதை

அம்மா…!

மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி:

மங்காத ஒளியாக,
அணையாத நெருப்பாக,
களையாத மேகமாக,
ஓயாத அலையாக,
நிற்காத தென்றலாக,
மறையாத சூரியனாக,

 » Read more about: அம்மா…!  »

புதுக் கவிதை

புதுமைப்பெண்

அரசுப்பொதுத் தேர்வில்
மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில்
மாணவிகள் மரணம்!

பலகலை நிகழ்ச்சிகளில்
மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக் காதலால்
மாணவிக்கு அரிவாள்வெட்டு!

 » Read more about: புதுமைப்பெண்  »