அன்பிற்கு அடிமை ஆண்மகன்.!!!
ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற
மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!!
பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான்
எவ்வளவு பாசம்.
கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே
ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா?
இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!!
தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள்
அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக.
தம்பியும் கல்வியை கையில் ஏந்தி
தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.

