மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

“உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி?”என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .

“என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தாள்.

ஆனால், இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்வது இல்லை”

இதைகேட்ட தகப்பன் கேட்டான்..!

” அப்படி உன் அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?”

அந்த குழந்தை சிறு சிரிப்புடன் தன்
தகப்பனிடம் சொன்னான் …

“நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மாசொல்வாள், எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன்” என்று …

ஆனால் கொஞ்சநேரம் கழிந்த பிறகு என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,

நிலாவைக்காட்டி கதை சொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்…

ஆனால்…

இப்போதைய அம்மா, நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் ‘உனக்கு சோறு
தரமாட்டேன்’ என்று .

இன்றுடன் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது…..

பெற்ற தாய்க்கு நிகர் இந்த உலகில்
யாருமில்லை…!!