செய்திக்காகப் பரபரப்பு அடைந்த காலம் சென்றுவிட்டது. செய்தியால் பரபரப்பு அடைகிற காலம் வந்துவிட்டது. ஒரு தகவல் புதுமையானதாகவும், தேவையானதாகவும், இருக்கும் போதுதான் அது மக்களிடையே விழிப்புனார்வு கொடுப்பதாக மாறுகிறது. மக்களை மாற்றுகிறது. ஒரு செய்தி தரும் தாக்கத்தை பொருத்து ஏராளமானவர்கள் அஜாக்கிரதை நிலையில் இருநது  தங்களைப் ஜாக்கிரதை நிலைக்குப் பழக்கப்படுத்தி கொள்கிறார்கள். செய்தி பொது அறிவுக்கார்கள். காரணம் செய்தி தரும் தாக்கம் அப்படி. மேல் படிப்பைத் தொடர முடியாதவர்கள் அதிகம் வாசிக்கும் தாள் செய்தித் தாள். அவர்களுக்கு முனைவர்பட்ட ஆய்வு மாணவனுக்கு இருக்கிற மதிநுட்பம் உண்டு. அவர்கள் வாசித்தது வெறும் தாளல்ல இந்தச் சமூகம்.

சமூகத்தின் புள்ளி விவரங்கள் செய்திகள். ‘அரசியல் சண்டை, கந்துவட்டியால் விவாதம், கள்ளக் காதலால் உண்டான அதிர்ச்சி சம்பவம், விவாகரத்து, குடும்ப தகராறு, கூலிப்படை ஏவல், விமான விபத்து, நடைபாதை உடைப்பு, பாலியல் வன்கொடுமை, இராணுவச் சண்டை, காதலிக்காக மோதல், ஆசிட் வீச்சு’  இவ்வாறு சுட்டிக் காட்டப்பட்ட அனைத்தையும் நாம் செய்தியாகப் பார்க்கிறோம். இவையாவும் சமூக நடப்பியலின் வெளிப்பாடு. தினமும் நடக்கின்ற சம்பவங்கள் ஒரே குற்றப் பின்னணி கொண்டவை. ஆனால் நடப்பது வித்தியாசமான முறையில் என்பது அவலத்தின் உச்சம்.

நாகரிக காலச்சாரத்தில் உயரிய நமது தமிழின இளைய தலைமுறை அதே பண்பாட்டு பெருமையை கடைபிடிக்கிறார்களா? மேலை நாட்டு மோகம் அவர்களை கெடுத்து விட்டதா? அவர்களின் மூத்தோர்கள் சரியாக பக்குவப்படுத்தாமல் வளர்த்து விட்டார்களா? களவு வாழ்விலும், கற்பு வாழ்விலும் அறத்தை மதித்த தமிழர்களின் டி.என்.ஏ வா! முறை தவறி ஒழுக்கம் கெட்டு மனக்கட்டுப்பாடின்றி பண்பாட்டு கடிவாளம் இல்லாமல் வாழ்கிறது என்கிற  அதிர்ச்சி தமிழகத்திலே நிலவுகிறது.  வேர் வளமையாகயும், உயிர்ப்போடும் உறுதியோடும் இருந்து என்ன பயன்? இலைகளும் கிளைகளும் வறண்டு போய் காட்சியளிக்கிறன. பார்க்கிறவர்களின் கண்களில் வேரா தெரியும்? தமிழினம் என்கிற வேரின் பெருமை இலைகளிலும், கிளைகளிலும் அல்லவா இருக்கிறது.

“சுட்டி ஒருவர்பெயர்கொளல் பெறார்” என்னும் தொல்காப்பிய பொருளதிகார கூற்று அக இலக்கியத்திற்கு “தலைவன் தலைவி பெயரைச் சுட்டி காண்பித்தல் ஆகாது” என்று இலக்கணம் வகுக்கிறது. செய்தித்தாள்களில் பெயர்மாற்றப்பட்டுள்ளது என அடைப்புக்குறியில் குறிப்பிடுவார்கள். பெண்ணின் பெயரை உலகிற்கு தெரியப்படுத்துவது தவறு என்கிற கலாச்சாரம் செய்திகளில் இடம்பெறுவது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எதிர்கால நலனை கருத்தில் கொண்டுதான்.

செய்தி பரிமாற்றம் சமூக களத்தின் களைகளை வேரோடு பிடுங்கும் ஒரு உத்தியே ஆகும். தகவல் பரிமாற்றத்தை பொழுது போக்கிற்காக நவீன தலைமுறை பயன்படுத்தி வருகிறது. முக்கிய நிகழ்வுகளை தகவல்களாக பரப்பியதுபோய் தும்பலை எல்லாம் கூட முக்கிய தகவலாக பரிமாறி வருகிறார்கள்.

ரகசியங்களை எல்லாம் வெளியில் சொல்வதில் சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கிறார்கள். கவர்ச்சி, கலவி என தகவல் பாபரிமாற்றம் தன் புனிதத்தை இழந்து அசுத்தாமாகிவிட்டது. பிஞ்சு மனம் கூட நஞ்சு களமாகி மாற தகவல்தொடர்பு சாதனங்கள் எளிதாக அனைவரையும் பாலாக்கி வருகிறது. இளைஞர்கள் அதிக நேரம் செலவிடும் இடம் கல்விக் கூடமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் செல்போன்தான் அவர்களின் கனவுகளைக் கூட சிறைப்படுத்தி சிற்றின்பத்தை பேரின்பமாக காட்டி வருகிறது. தன்னை எல்லோர்க்கும் காட்டிக் கொள்ள ஆர்வப்படுகிறார்கள். பொறை எடுத்ததை பாம்பு கடித்து நுறைதள்ளிய கதையாய் பதிவிகிறார்கள். டிக் டாக், வாட்ஸ்அப், பேஸ் புக், மியுசிக்லி எல்லாம் சுதந்திரப் பறவைகளாய் இருந்த இளைஞர்களை சுருக்கி வட்டத்தினுள் பறக்க வைத்துவிட்டன. பாவம் திகார் இல்லாமலே திவாலாகிறார்கள். தன்னிடம் இல்லாத காரை இருப்பதை போலவே புகைப்படம் எடுத்து காட்டிக் கொள்வதில் என்ன கௌரவம் இருந்துவிட போகிறது. புகைப்பட போதையர்களின் பலருடைய முகமூடிகள் முகநூலில்தான் மாட்டி வைக்கப்படுகின்றன.

பெண் வாழ்வியல் முறையில் இருந்து நம் கலாச்சாரத்தின் சிறப்பு. பெண்ணின் பாதை தவறாகும் போது காலச்சாரத்தின் கண்கள் கட்டப்பட்டுவிடுகின்றன. கலாச்சாரம் சீதையாக இல்லாமல் தாசியாக மாறிவிடுகின்றன.

பொள்ளாச்சி சம்பவம் திராவிட நல் திருநாட்டின் நற்பெயருக்கு வைத்த முதல் கொல்லி.  நுனி நாக்கில் ஆங்கிலம், பொருள்மிகுந்த உடை அலங்காரம், செலவு செய்ய பணம், வயதை ஈர்க்கும் கவர்ச்சி பேச்சு, படிதாண்ட வைக்கும் அணுகுமுறை, நீதான் என் உலகம், ஒருமுறை உன்னை பார்க்கனும் என்றெல்லாம் அணுகி ஒரு பெண்பிள்ளையை வன்கொடுமை செய்ததுமில்லாமல், அவர்களின் ஏமாளித்தனத்தையும், தைரிய்யமின்னமையும் பயன்படுத்தி பணம் பறித்தும் ஒரு கும்பல் உலவுகிறது என்றால் இதுவே நரகம்.

நுண்ணறிவிலும் உணர்ந்து செயல்படுவதிலும் பெண்கள் தேர்ச்சிப் பெற்றவர்கள். சமுதாய போக்கு வெகுசில பெண்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. பெண்களில் பலர் மாற்று பேருந்தில் ஏறி பயணம் செய்ய கூட தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். கல்லூரி வீடு அலுவலகம் வீடு என்று வாழ்வை குறுக்கியே வாழும் பெண்கள்தான் எவனோ ஒருவனுடைய பேச்சை கேட்டு  ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள். ஏமாற்றத்திற்கு பிறகு மாற்றம் வருவது மனித சமுதாயத்திற்கு இயல்பு.

ஒருவனிடத்தில் ஏமாற்றப்பட்டோம் என்பதைவிட பெரிய முட்டாள்தனம் வேறில்லை. ஒருவனை ஏமாற்றுகிறோம் என்பதைவிட பெரிய பாவமில்லை. கடின உழைப்பால் சம்பாதிக்கிற பணம் தேவன் ஆசையோடு கொடுக்கிற பணமாகும். கடினப்பட்டு பெற்றோர் உழைத்த பணத்தை ஊதாரியாய் செலவிடும் பிள்ளை பட்டுபோன தென்னம்பிள்ளை. போன்களை மனிதனை தனிமைப்படுத்தி வைத்தான் ஆனால் இன்று போன்கள் மனிதனை தனிமைப்படுத்திவிட்டன. யாருக்கும் தெரியாது என்பது கூட போன்களுக்கு தெரிந்துவிடுகின்றன. சிலருடைய உண்மையான மனதை அவர்களின் போன்களை பார்த்துதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

காலம் கெட்டு கெடக்கு பாத்து காலேஜ்க்கு போ எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு உனக்குள்ளேயே வச்சிக்காத என்று குழப்பத்தோடு உலவும் மனதை நீல வானமாக தெளிவாக்க யாரும் அருகில் இல்லாதபோது எதை செஞ்சா இப்ப என்ன தப்பு இந்த காலத்துல இதெல்லாம் சகசம் என்கிற நியாபடுத்தும் எண்ணம் தானாகவே எல்லோர்க்கும் வந்து விடுவது எளிதானதாக  ஆகிவிட்டது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பத்தில்  மெத்த படித்த ஏற்கனவே திருமணமான பெண்களும் சம்பந்தப்பட்டது தமிழகத்திற்கே அதிர்ச்சி. நீரோடையாய் ஓட விட வேண்டிய மனதை தனிமைப்படுத்தி சமூக வலை தளத்தில் மனதை செலுத்தும்போது யாராவது கவர்ச்சி ததும்ப புகைப்படம் பதிவிட்டால் ரசிக்கிறார்கள்.  அவா;கள் பேச தொடங்கினால் சந்தோசத்தில் நெருங்கி பழகி முகவரியே தெரியாத முகத்திற்கு நம் உள்ளங்கையில் வைத்திருக்க வேண்டிய ரகசியத்தை கை விரித்து காண்பித்து விடுகிறார்கள்.

முகநூலில் பழகியவனுக்காக அம்மா தடையாக இருக்கிறாளே என்று சொந்த அம்மாவையே கூலிப்படை வைத்து கொன்ற மகள் கொஞ்சம் கூட அம்மாவை கொன்றுவிட்டோமே என்கிற முகஅயர்வு இல்லாமல் சிறைக்குச் செல்கிறாள் ஒருத்தி. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட ஒருத்தி பிரியாணி கடைக்காரனிடம் தன்னை இழந்து தன் மகன்களையே கொன்ற தாய் என்று எத்தனை எத்தனை சோக சம்பவம் நம்மை ஒவ்வொரு முறையும் கதிகலங்க வைக்கின்றன.

தனக்குள்ளே அடங்கி இருக்க தெரிய வேண்டும். தன்னை தானே காத்து கொள்ள பழக வேண்டும். நம் வாழ்வை காக்க தெரியமல் இருப்பது வள்ளுவன் சொல்வதை போல “எரிமுன்னர் வைத்தூர்வது போல கெடும்”.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…

தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது

நேர்காணல்

தேயிலை தேசத்து சாமான்யனுடன்…

நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>

நேர்காணல்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும்

அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி