நற்கொள்கை வகுக்காமல்
அணியில் கூட்டலும்
கழித்தலும் அன்றாடம்
நிகழ்தலின் உச்சம்!
சொத்துக்களைக் குவித்தலும்
பெருக்கலுமே குறிக்கோளாய்
அரசியலார் கொண்டிருக்கும்
அவலநிலை !
காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும்
அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க…
உழைப்புகளால் கேள்விக்குறியாய்
முதுகு வளைந்த மக்களோ…
ஆச்சரியக்குறியாய் விழிபிதுங்க
நிர்பந்த அடைப்புக்குறிகளுக்குள்
தள்ளப்பட்டனர்..!
அடடா …. மேற்கோள்கள் அற்ற
கட்டுரைபோல் வெறுமனே
தமிழின மக்கள்
தினம் தினம் போராடித்
தோற்றுக் கொண்டிருக்கின்றனர்…
ஏமாற்றுச் சிகரங்களில்
ஏறியவாறு !…