என்னதான் மாயம் செய்தாய் கண்ணா .. !!
என்னுள் இளகும் ..
இந்தப் பெண்ணுள் ..
புகுந்து நீ ! என்னதான் மாயம் செய்தாய் !!
பார்த்த விழி பார்த்தபடி நிற்க
வைத்தாய் என்னை ..!
பைத்தியம் போல் உன்னழகில்
சொக்க வைத்தாய் .. !!
கோதையிவள் மெய்யோடு மெய்யணைத்து ..
கொஞ்சினாய் ..! கெஞ்சினாய் .. !!
பின் குளிர வைத்தாய் !!
மல்லிகை மலர் சூடி
மஞ்சத்திலே – உன் மார்பினில்
சாய்ந்திருக்க கனவு கண்டேன் … !!
அள்ளயெடுத்து என்னை அணைத்து
மெல்ல .., செய்த அணங்கனின்
லீலைகள் என்ன சொல்ல ..?
உள்ளும் புறமாகி நீ நின்றாயடா ..!
தீயில் உருகும் மெழுகாக்கி
எனைக் கொன்றாயடா . !!
சொல்லிலே தேனிழைத்து
சொன்ன சொல்லால் …
சுந்தரி என்னை நீ வென்றாயடா .. !!
1 Comment
சௌந்தர்யன் · ஆகஸ்ட் 6, 2017 at 22 h 13 min
சுந்தரன்யென்
சிந்தைக்
கவர்ந்தாயடி
சகியே…