கடலோரத் தென்னை மரம்
(எண்சீர் விருத்தம்) கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல் களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை! தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய் தன்னிழகை ஒத்தவளை தலைவணங்க வாராய்! வெண்மேகம் உருவாக உன்பங்கும் உண்டோ வெள்ளியெனத் துள்ளிவரும் வான்துளியின் தாய்;யார்? மண்மீது தவழ்ந்தாடும் மலைக்காற்றும் சேரும் மனங்குளிரத் தென்றலுனைத் தாலாட்டிப் பாடும்! Read more









