கடலோரத் தென்னை மரம்

(எண்சீர் விருத்தம்) கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்         களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை! தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்         தன்னிழகை ஒத்தவளை தலைவணங்க வாராய்! வெண்மேகம் உருவாக உன்பங்கும் உண்டோ         வெள்ளியெனத் துள்ளிவரும் வான்துளியின் தாய்;யார்? மண்மீது தவழ்ந்தாடும் மலைக்காற்றும் சேரும்         மனங்குளிரத் தென்றலுனைத் தாலாட்டிப் பாடும்! Read more