கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு . மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி . பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு  பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !! ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப் பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே ! காசைநம்பி வாழ்வெல்லாம் கஜாவினால் போனதைய்யா ! தேசுடைய மாமரமும் தெருவினிலே கிடக்குதைய்யா !! உயிருள்ள மரமெல்லாம் உணர்வற்று சாய்ந்ததுவே ! உயிரற்ற மின்கம்பம் உறவற்று வீழ்ந்ததுவே ! பயிரெல்லாம் அழுகிப்போய் Read more

வாழவைக்கும் காற்றாய் வாவா

எதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய்         எல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய் பதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று         பாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள மதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க         மனங்களெல்லாம் தன்னலத்தால் அழித்து நிற்க விதவிதமாய்ப் பெயர்களிலே வந்து நீயும்         வீரத்தை யார்புகழ காட்டு கின்றாய்! வழிவழியாய் வரவேற்பு Read more

நதிக்கரை ஞாபகங்கள்

மழை பெய்த மலைகளிலே         மறுகி ஓடும் நீரோடை; குறுகிய தோர் காட்டாறு         கூடி வீழும் அருவிகளும்; அடித்து வந்த மூலிகையின்         அளவற்ற நறு மணங்களுடன்; பரவி ஓடி வந்தநதி         படர்ந்ததே சம வெளிகளிலே ! கரை கட்டும் சரிகைச்சேலை         காற்றிலசைந்து நடந்தார்ப் Read more

தீபாவளி -அன்றும் இன்றும்

ஏற்றிடுவோம் தீபத்தை நன்னாளில்       எத்திக்கும் பரவிடுமே மகிழ்ச்சிவெள்ளம் போற்றிடுவோம் பண்டிகையை அந்நாளில்       பொங்கிடுமே புதுவாழ்வு மக்களிடம் மாற்றங்கள் வந்திடுமா நாள்தோறும்       மண்ணுலகி லின்பமுமே தாங்கிடுமா சீற்றங்கள் வேண்டாமே எந்நாளும்       சிறப்புடைய தீபவொளி ஒளிர்விடட்டும் . கொடுக்கின்ற மனிதரெல்லாம் இன்றுமாறிக்       கொடைகுணத்தை இழந்துவிட்டார் இவ்வுலகில் அடுக்கடுக்காய் மக்களினம் பெருகிப்போய்   Read more

காமத்தின்  கண்பறிப்போம்

மலராத  மொட்டதனின்  இதழ்கி  ழித்து        மதுவுண்ட   வண்டொன்றைப்  பார்த்த  துண்டா புலராத  இரவுக்குள்  புணர்தல்  போன்று        புரிந்திட்டார்   வன்செயலைக்  கயவர்  சில்லோர் ! வலம்வந்து  வலம்வந்தே   அழகு  மொட்டை        வன்புணர்வில்   சீரழித்தார்   துடிது  டிக்க நிலம்மீதில்   எவ்வுயிரும்  செய்தி  டாத        நீசசெயல்   செய்வதெல்லாம்   மனிதர்  தாமே ! பூக்காத   இளமானைக்   கொம்பு  மான்தான் Read more

பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை

பூஞ்சோலை மணக்கிறது. ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது. பூவாக மொட்டுகள் துடித்திடவே. பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே. மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே மேகமதைக் குயில்கள் அழைத்திடவே மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே காட்சிகளைக் கண்கள் பதித்திடவே தென்றல் தேகத்தைத் தழுவிடவே தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே. மல்லிகைத் தோட்டம் மயக்கிடவே மாமன் மகள் மயங்கிடவே முல்லைப் பூக்கள் சிரித்திடவே. முத்தங்கள் வண்டுகள் தந்திடவே. சலசலக்கும் ஓடை நீரினிலே. Read more

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள் பத்தியமாய்ச் சுமக்கவில்லை சித்தத்தில் உன்நினைவைச் சிறிதேனும் இறக்கவில்லை! தாலாட்டிப் பாலூட்டிப் பார்த்திருந்தே இரசிப்பதில்லை! ஆளாகி நீஉயர அறிவுருத்த மறப்பதில்லை! உயிரிருந்தால் போதுமென்ற உணர்வுடனே இருப்பதில்லை! உயிருக்குள் உனைவைத்த உள்ளுணர்வைச் சொல்வதில்லை! தந்தையிவர் எனக்காட்டும் தாய்மட்டும் உயர்வில்லை! சிந்தையிலே சிறைவைத்த தந்தைக்கோ நிகரில்லை!

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை         இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று திசைமாறிப் போகாமல் திறமை யோடு         தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார் விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி         வினையாற்றத் தமிழ்க்குழுவில் பாடு பட்டார் அசைபோட்டே சுவைக்கின்ற சங்கப் பாப்போல்         அரும்பாக்கள் குவித்திட்டார் தங்கப் பாதான்! படைப்பாளி யாய்மட்டும் Read more

எத்திசையும் முழங்கிடுவோம்

பையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில் நாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று பையப்பைய நடக்கும் அகழ்வாராய்ச்சியில் பகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று. குறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின் குரலோசை மொழிபெயர்ப்பில் உலகெங்கும். புறமும் அகமும் காட்டிய பாடல்களில் பளிங்கென வாழ்வியல் முறைகள் நூலெங்கும். அகத்தியம், தொல்காப்பியம், இளம்பூரணம் இன்னும் அமுதத் தமிழ் வளர்த்த நூல்கள் உண்டு. முரசு கொட்டித் தமிழ் மணத்த தெருக்களில் இன்றும் முத்தமிழில் தெருக்கூத்துக் காட்சிகள் உண்டு. தமிழ் Read more

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும் சித்திரமாய் இருந்திடாமல் உழைக்கின்ற மானிடரே ! உலகத்தின் ஆணிவேரே ! களைப்படையா உழைப்பாலே காலமுழுதும் நிலைப்போரே ! பிழைப்பதற்கு இவ்வழிபோல் பிறிதொன்று இல்லையே ! உச்சிவேளை தகித்தாலும் உணர்த்தும்பசி போக்கிடவே கச்சிதமாய் பணிமுடிக்கும் கல்மனதுக் காரர்களே ! மெச்சிடவே பலருமிங்கே மெய்வார்த்தைக் கூறிடுவர் , தச்சுத்தொழில் செய்தாலும் தவறில்லைத் தரணியிலே , காகிதமே பொறுக்கினாலும் கட்டாயம் அதுதொழிலே , ஆயுதங்கள் செய்தாலும் அத்தனையும் தொழில்தான் , தாகமெனத் Read more