வேரில் பழுத்த பலா!!!
வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா? பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால் கார்கால கன்னிபோல கனத்திருந்தால் பழமாகி சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!! மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும். பலநாளின் பலந்தரவே பசுமையாக மலர்ந்திடுமே. அலர்ந்திடுமே அந்திவேளை அழகான அல்லிமலர் உலர்ந்தமனம் உவகைகொள்ளும் உள்ளமெங்கும் இன்பவெள்ளம். மணக்கின்ற மலர்களுக்கும் மறுவாழ்வு தந்திடுவோம் வனப்புடனே காத்திடுவோம் வரம்வேண்டி நின்றிடுவோம் கனப்போழுதும் மறவாது களிப்புடனே போற்றிடுவோம். மனம்முழுதும் ரசித்திடுவோம் மலரட்டும் மொட்டுகளும். மண்ணுலகில் பிறக்கின்ற Read more



