வான் நிலவும் வண்ண நினை(ல)வும்

பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ? பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ? வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே! காதோடு வருடுமந்த காற்றோசை போலக் கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே, வண்ணவண்ண நிறங்கொண்ட வானவில்லைக் கூட்டி வாழ்ந்ததிந்த வாழ்க்கையதன் வாசமதைத் தேடி.. உலவுகின்ற நிலவுபோல உள்ளோடு ஒளிரும் உறைந்தபனிக் குவியலென உள்ளமெல்லாம் சிலிர்க்கும் நினைவோடு கனவினையும் நித்தமிங்கு பூட்டி நிலவுக்கு ஈடாக காலவெளி பறப்போம்!  

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட           மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத் துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?           மெல்ல அலையெழுப்பும் சிற்றோடை நீர்சரியோ? மஞ்சுப் பொதிசரியோ ? மயக்கும் விழிசரியோ?           கொஞ்சும் குயில்வந்து குரலிசைத்துச் சொல்லிடுமோ? நெஞ்சம் நிறைந்ததென் நெகிழ்ந்த காதலதைச்           சொற்களின் Read more

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு முறுவலுடன் ஆடும் உறிமாலை, பொன்னகை பூட்டி அலங்காரம் புன்னகை சிந்தும் உற்சவரும், மின்னிடும் விளக்குகள் சொலிக்க வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி, சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா? உருண்டிடும் சக்கரம் சுழல உருவிலே சிறிய தொன்று, உரமதாய் உன்னைத் தாங்க ஊரெல்லாம் சுற்றி வருவீரே! பெற்றவர் அச்சினில் ஆணி பெருந்தேர் மக்களெனப் போற்ற, உற்சவர் என்றவர் குறிக்கோள் ஊர்வலம் சுற்றிடக் கண்டீர்! அழகினுக் Read more

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி, வண்ண மயில்கள் ஆடுது; வாலிபத்துச் சோலையிலே, வந்து நின்று ஆடுது; வளைக்கரங்கள் கோர்த்திங்கு, வட்டம் சுற்றி ஆடுது; கிறுகிறுத்துப் போகும் தலை, சிரி… சிரித்தே மகிழுது. ஆலவட்டம் போலச் சுற்றி, அகமகிழ்ந்தே ஆடுது; ஆடும் குடை ராட்டினமாய், அழகு ஊஞ்சல் ஆடுது; ஆடிப்பாடு பெண்ணே இது, அகம் மகிழும் காலமே, அடுத்து பல பொறுப்பு வரும், அது வரையில் ஆடிடு.

தடம்புரளும் நாக்கு

எண்சாண் உடம்பு வைத்து, எலும்பு தோல் ஆடை போர்த்தி, வஞ்சத்தை இதயமாக்கி, படைத்தானே இறைவன் அவன். நித்தம் தடம்புரளும் நாக்கினிலே, நரம்பு வைத்தான் எலும்பில்லை, எலும்பைஎண்ணி வைத்து, பிறர் பேச்சுப் பேசினாலே, நொறுங்கிப் போகும் முறைகளை ஏன் படைக்கவில்லை? வரம்புகள் மீறி விட்டோம் – மன வக்கிரங்கள் சேர்த்து விட்டோம், ஆறடி நிலத்திலே; அவனி வாழ்க்கை முடியும் முன், ஆயிரம் பொய்கள், அவசரக் கோலங்கள்.

நதிக்கரை ஞாபகங்கள்

மழை பெய்த மலைகளிலே         மறுகி ஓடும் நீரோடை; குறுகிய தோர் காட்டாறு         கூடி வீழும் அருவிகளும்; அடித்து வந்த மூலிகையின்         அளவற்ற நறு மணங்களுடன்; பரவி ஓடி வந்தநதி         படர்ந்ததே சம வெளிகளிலே ! கரை கட்டும் சரிகைச்சேலை         காற்றிலசைந்து நடந்தார்ப் Read more