பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ?
பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ?
வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே
வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே!

காதோடு வருடுமந்த காற்றோசை போலக்
கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே,
வண்ணவண்ண நிறங்கொண்ட வானவில்லைக் கூட்டி
வாழ்ந்ததிந்த வாழ்க்கையதன் வாசமதைத் தேடி..

உலவுகின்ற நிலவுபோல உள்ளோடு ஒளிரும்
உறைந்தபனிக் குவியலென உள்ளமெல்லாம் சிலிர்க்கும்
நினைவோடு கனவினையும் நித்தமிங்கு பூட்டி
நிலவுக்கு ஈடாக காலவெளி பறப்போம்!

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »