எண்சாண் உடம்பு வைத்து,
எலும்பு தோல் ஆடை போர்த்தி,
வஞ்சத்தை இதயமாக்கி,
படைத்தானே இறைவன் அவன்.

நித்தம் தடம்புரளும் நாக்கினிலே,
நரம்பு வைத்தான் எலும்பில்லை,
எலும்பைஎண்ணி வைத்து,
பிறர் பேச்சுப் பேசினாலே,
நொறுங்கிப் போகும்
முறைகளை ஏன் படைக்கவில்லை?

வரம்புகள் மீறி விட்டோம் – மன
வக்கிரங்கள் சேர்த்து விட்டோம்,
ஆறடி நிலத்திலே; அவனி
வாழ்க்கை முடியும் முன்,
ஆயிரம் பொய்கள்,
அவசரக் கோலங்கள்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.