வானவில்லை வரிந்து உடுத்தி,
வண்ண மயில்கள் ஆடுது;
வாலிபத்துச் சோலையிலே,
வந்து நின்று ஆடுது;
வளைக்கரங்கள் கோர்த்திங்கு,
வட்டம் சுற்றி ஆடுது;
கிறுகிறுத்துப் போகும் தலை,
சிரி… சிரித்தே மகிழுது.
ஆலவட்டம் போலச் சுற்றி,
அகமகிழ்ந்தே ஆடுது;
ஆடும் குடை ராட்டினமாய்,
அழகு ஊஞ்சல் ஆடுது;
ஆடிப்பாடு பெண்ணே இது,
அகம் மகிழும் காலமே,
அடுத்து பல பொறுப்பு வரும்,
அது வரையில் ஆடிடு.