அடங்கி முடங்கி!

இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா குறைபலச் சொல்லி குறைபடும் மாந்தர் கறைபட நாக்கு கசந்திடும் வார்த்தை தரையினில் கொட்டித் தளராமல் வீசி மறைதனை ஓத மறக்கும் நிலையும் கறையாமல் நின்று கசந்திடும் வாழ்வில் அறைதனில் சோர்ந்து அடங்கி முடங்கி பறையடி போலலையும் பற்பல எண்ணம் நிறைந்துதான் நெஞ்சினில் நிம்மதி போக்குவரே!

உயர்வென்ன தாழ்வென்ன!

(பாவகை: இயல் தரவிணைக் கொச்சகக்கலிப்பா) பாடுபடும் கைகள் பகலவன் போலொளி கூடுமெழில் தன்மானக் கூடெனவே ஓங்கிநிதம் ஆடுகிற சோலைகளாய் அன்னமிடும் வான்மழையாய் ஈடுயிணை இல்லாத ஈகையின் வேர்களாம்! நாடுகிற எண்ணத்தின் நம்பிக்கை கோள்களாய்க் காடுகரை வித்திட்டுக் காய்கள் பயிரிட்டு மேடுகளைச் சீர்செய்து மென்மையாகச் செப்பனிட்டு வாடுகிற மண்ணையும் வாழ்விப்போர் பாட்டாளி! உளமெல்லாம் வேண்டும் உணவுதனை ஆக்க தளமாக மண்ணினில் தானியங்கள் நட்டு வளமான நல்லுரம் வாஞ்சையுடன் தூவிப் பலந்தரும் காயும் Read more

க(பெ)ற்ற அனுபவம்!

பாவகை: வஞ்சித் தாழிசை கூடம் அதிரும் சாடல் கேட்டு வேடம் கலைந்த பாடம் பெ(க)ற்றேன்! தேடி வந்து சாடித் தீர்த்தக் கேடிச் சொல்லில் கோடி பெ(க)ற்றேன்! ஆடு களத்தில் வாடும் உயிரைப் பாடு படுத்தும் கேடும் பெ(க)ற்றேன்! — சிகரம் ஏறி மகனும் ஒதுக்கி பகடி கொடுக்கும் தகனம் பெ(க)ற்றேன்! மமதை கொண்டு நமட்டுச் சிரிப்புக் கமழும் உறவில் எமனைப் பெ(க)ற்றேன்! ஊரும் பகைக்க சேரும் உறவில் யாரும் மதிக்காப் Read more

குறளோடு உறவாடு!

வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! – குறள்
வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்!
தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! –
தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!

உலகம் மாறிப் போச்சு!

குளமுமே வத்திப் போச்சு குடிக்கவோ தண்ணி இல்ல! – இப்ப நிலமுமே காஞ்சு போச்சு நிலத்தடி நீரு மில்ல! விளச்சலும் குறைஞ்சு போச்சு விளைநிலம் வீடா ஆச்சு – நல்ல மழையுமே பெய்ய வில்ல மனசுமே உடைஞ்சு போச்சு! நீரோடும் ஆறு மிங்கே நீரின்றி வறண்டு போச்சு – செழித்த ஏரோடும் நிலத்தக் காணோம் எல்லாமே மாறிப் போச்சு! மரத்தயும் வெட்டி யாச்சு மண்வளம் கெட்டுப் போச்சு! – செயற்க Read more

விழியாலே கதைசொல்லும்

பேச்சில் இனிமை வேண்டும் !

வாக்கொன்று தந்துவிட்டால் அவனி தன்னில் …… வந்தஇடர் பாராமல் காக்க வேண்டும் ! தாக்கத்தைத் தரும்வகையில் பேச்சை மாற்றித் …… தன்போக்கில் போனால்பின் மதிப்பும் உண்டோ ! ஊக்கத்தைத் தரும்நல்ல உணர்வு வேண்டும் …… உண்மைக்கே மதிப்பளித்துப் பேச வேண்டும் ! ஆக்கத்தைக் கெடுக்கின்ற நாக்கின் ஆற்றல் …… ஆங்காரம் அத்தனையும் சாபக் கேடே ! கலகத்தைப் போக்குகின்ற நாக்கும் உண்டு …… கண்ணீரை வரவழைக்கும் நாக்கும் உண்டு ! உலகத்தார் மதிக்கின்ற நாக்கே வேண்டும் ! Read more

புரட்சி வெடிக்கட்டும்!

உழவுத் தொழிலும் செழிக்கட்டும் – நம்
உள்ளம் மகிழ்ச்சி கொள்ளட்டும்!
வளமாய் நாட்டை மாற்றிடவே – ஒரு
வண்ணத் தமிழன் ஆளட்டும்!

விடையும் காண விரையட்டும் – நல்
வெற்றிக் கனியைப் பறிக்கட்டும்!
குடியால் வீழ்ந்து கிடப்போரும் – தமிழ்க்
குடியைக் காக்க விழிக்கட்டும்!

கம்பன் புகழைப் பாடு மனமே !

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார்! – தேயவழி
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து!

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும்
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர்! – அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு!