எடுப்பு

குறளோடு உறவாடு நெஞ்சே! – திருக்
குறளோடு உறவாடு நெஞ்சே!
———————————————————————– (குறளோடு)

தொடுப்பு

அறத்தோடும் பொருளோடும் இன்பத்தோடும் கொஞ்சும் – நல்
அன்போடும் பண்போடும் அருளோடும் விஞ்சும்!
———————————————————————– (குறளோடு)

முடிப்பு

நலமோங்கும் வாழ்வியலை நன்றாகப் பேசும்! – குறள்
நன்னெறியாம் ஒழுக்கத்தை நமக்கள்ளி வீசும்!
தலைவாழை கல்விதனை மகிழ்வோடு கூறும்! – குறள்
மாண்புறுமாம் ஈகைகுணம் வளரவுளம் சேரும்!
———————————————————————– (குறளோடு)

வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! – குறள்
வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்!
தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! –
தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!
———————————————————————– (குறளோடு)

உயர்ந்தகுடி இலக்கணத்தை குடிமையிலே காட்டும்! – குறள்
உலகோர்க்கு மனமோன்றே உயிரெனவே ஊட்டும்!
அயர்ந்தவரின் பிறமனையை நயப்பவரை ஓட்டும்! குறள்
அடியாள்கள் அனைவரையும் சிறையில்தள்ளிப் பூட்டு!
———————————————————————– (குறளோடு)


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.