சொர்க்கத்தைத் தந்தாயடா !

சாமத்தில் எழுந்து காமத்தில் நுழைந்து மோகத்தை விதைத்தாயடா – இரு போகத்தை அறுத்தாயடா. வேகத்தில் மிதந்து சோகத்தை மறந்து தேகத்தை வதைத்தாயடா – என் தூக்கத்தைக் கெடுத்தாயடா. தாகத்தை நினைந்து மேகத்தைத் திறந்து யூகத்தில் சரிந்தாயடா – பட நாகமாய் விரிந்தாயடா . காகத்தைச் சினந்து கூகையை வெறுத்து தோகையை விரித்தாயடா – என் தூய்மையைப் பறித்தாயடா. ஆகமவிதிப் படியேநீ ஆறுகால பூசையில் சொர்க்கத்தைத் தந்தாயடா – எரி சூளையிலே Read more

பாடிப் பறந்த குயில்!

பாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம் தமிழ் வணக்கம்! தென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித் தேனாற்றில் நீராடும் தமிழே! என்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி இழைத்தூட்டுத் தித்திக்கும் அமுதே! கண்காட்டு! கை..காட்டு! கம்பன்தன் சீரூட்டு! கவியென்றன் நெஞ்சத்தின் உயிரே! பண்பூட்டு! பணிவூட்டு! விண்மூட்டுப் புகழ்சூட்டு! பணிகின்றேன் எனையீன்ற தாயே! திருமால் வணக்கம்! ஆழ்வாரின் திருக்கண்ணா! அழகான என்மன்னா! அடி..போற்றித் தொழுகின்றேன் வாராய்! வீழ்வாரின் விதிமாற்றித் தாழ்வாரின் துயரோட்டி வெல்கின்ற அருட்பார்வை Read more

எல்லோரும் வெல்வோம்

சொத்துக்கள் சேர்ப்பதுவே வெற்றி யன்று சொந்தங்கள் சேர்ப்பதுவும் வெற்றி யன்று எத்தனைநாள் இப்புவியில் வாழ்ந்தோம் என்னும் எண்ணிக்கை வெற்றியன்று வாழும் நாளில் எத்தனைபேர் வாழ்வதற்கே உதவி செய்தோம் என்பதுதான் வெற்றிக்குத் துலாக்கோல் தம்பி செத்தபின்னர் இவன்போல யாருண் டென்ற சேமிப்பே நிலையான வெற்றி யாகும். உலகத்தின் வரலாற்றை உற்றுப் பாராய் உழைப்பாலே உயர்ந்திட்ட பலரைக் காட்டும் துலக்காத செப்புப்பாத் திரத்தைப் போல தூங்கிக்கொண் டேயிருந்தால் உன்னைப் பார்த்துச் சிலந்திக்கும் சிரிப்புவரும் Read more

தேன்தமிழ் அழகு!

தேங்கிக் கிடக்கும் தேன்தமிழ் அழகைத் தேடிக் கண்டேன் அறிதாய்! ஏங்கித் தவிக்கும் எந்தன் நெஞ்சின் ஏக்கம் தன்னை அறிவாய்! தாங்கிக் காப்பேன் தமிழே உன்னை தடைகள் தாண்டி வருவாய்! நீங்கா துன்னை நினைவில் வைத்தேன் நெருங்கி வந்தேத் தொடுவாய்! ஆளை மயக்கும் அணிச்சப் பூவை அள்ளிச் சுவைக்கத் தேடும்! சோலை வனமா? சுந்தரத் தமிழா? சொந்தம் வேண்டிப் பாடும்! மாலை நேர மையல் நிலவை மனத்தில் வைத்தே வாடும்! பாலை Read more

தமிழ்த்தேனே

மலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில் கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர் கலைத்தேனே எனவேறு மொழிக லக்க விலைத்தேனே ஆனாயே! விழித்தே னேநான். விரைந்தேனே உனையுநறுந் தேனே யாக்கக் குலைத்தேனே உனையழிக்குந் திட்டம். : நல்ல குலைத்தேனே! எழுந்தேனே உனைவ ளர்க்க! அலைந்தேனே செந்தேனே! உனையு யர்த்த அழுதேனே துடித்தேனே உன்நி லைக்கே உலைந்தேனே உனைத்தின்று வாழுங் கூட்டம் உவகைத்தே னேயுண்ணக் கண்டே நானும் குலைந்தேனே! Read more

தேனே…

செந்தமிழ்நா டென்கையிலே செவியருந்தும் தேனே! செப்பியசீர் பாரதியின் சேதிபடித் தேனே! எப்படியோர் மொழிக்கிந்த இனிமை? நினைந் தேனே! பாரதிமுன் என்வினவை கேட்கவிழைந் தேனே! வுடன்சற்றே இந்தவிழை விழியுமயர்ந் தேனே! தனைக்கனவில் எம்கவிக்கோ கண்டுவியந் தேனே! அவனடியைப் அந்தநொடி பற்றிவிழுந் தேனே! ஆதுரத்தில் அணைத்தெடுத்த சிறகுமுளைத் தேனே! சேமநலம் சிலபொழுதுச் பேசியிருந் தேனே! மீசைநயம் சீர்முறுக்கு பார்த்துமகிழ்ந் தேனே! பேசியபின் பலகதைகள் நினைவுமடைந் தேனே! வினவிவிடத் பாரதியை திடமுமிகுந் தேனே! கவிஞனிடம் Read more

தென்றல்விடு தூது!

தென்றல் அவள் மேலாடை தென்றல் அது தாலாட்ட மேலெழுந்த அவள் நூலாடை முக்காடாய் அவன் முகம் வருட வசியம் செய்யும் அவள் வாசம் சுவாசமாய் அவன் நாசிபுக முழுதாய் அவளை முழுங்கிவிட அனுபவக் காற்றை தூதுவிட்டான் எடுத்திடவோ கொடுத்திடவோ காதல் மட்டுமே அவன் கையிருப்பாய் மறுத்திடவோ ஏற்றிடவோ நாணம் மட்டுமே அவள் தவிப்பாய் மண்ணில் திரியும் நிலவுமகள் கண்ணுக்குள் அவனைக் குவிக்க இடை புகுந்த துணைக் காற்று எட்டப்பனாய் காட்டிக் Read more

தற்காப்புக் கலையே பிரணவமாகும்..!

நசையெலாம் நனவாய் நிகழ்த்திட —– அசைமலர் அடர் நந்தவனத்தே பூசை கொள் தலைவன் வருகைக்காய் —– ஆசையால் அலர்விழி காத்திருந்தாள் கண்ணனவன் கழற் கூடிடுவான் —– முன்னமவன் செப்பிய வாக்கால் கன்னம் வைக்கும் கைச்சிறையில் —– கன்னிமயில் யான் மெய்துறப்பேன் எண்ணியே விண்ணகத் தாரகை —– எண்திசை நோக்கி நின்றாள் மண்ணொளி கதிரோன் மறைய —– மாலைமகள் மகிழிருள் சூழ்ந்தாள் கண்ணிமை உலர்ந்து சோர —– காலத்தோடு கரைந்து கதழ்ந்தாள் Read more

பாடு மனமே பாடு!

எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்     ஏந்தும் இசையளிக்கும் இன்பம்! பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்     போதும் இனியெதற்குத் துன்பம் ! இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை     என்றும் மனச்சுமையைப் போக்கும் ! அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும்      அமுதச் சுவையழகைத் தேக்கும் ! பாடும் குயிலுடனே பருவ மங்கையவள்     ஆடிக் கழித்திடுவாள் தினமே ! நாடி Read more

இன்னும் உறங்கிடும் ஞாபகமோ!

செந்தமிழ் போற்றிடும்  சேவக னே -உன்னைச் சேர்ந்த வர்க்கேது துன்பமிங் கே அந்தியில் பூத்திடும் தாமரை யோ -இவள் அன்பைப் பொழிந்திடும் தேவதை யோ! கட்டிக் கரும்பென வந்தவ னே -சிறு கைவிர லாலெனை வென்றவ னே கொட்டிக் கொடுத்திடு கோமக னே -இன்பா கோடிச்சு கம்தரும்  மோகன மே! என்னை ஈர்த்தவன்  நெஞ்சினி லே  – பொங்கும் இன்தமிழ்க்  கற்பனைக் காவிய மே தன்னில் சரிபாதி என்றவ னே Read more