நசையெலாம் நனவாய் நிகழ்த்திட
—– அசைமலர் அடர் நந்தவனத்தே
பூசை கொள் தலைவன் வருகைக்காய்
—– ஆசையால் அலர்விழி காத்திருந்தாள்
கண்ணனவன் கழற் கூடிடுவான்
—– முன்னமவன் செப்பிய வாக்கால்
கன்னம் வைக்கும் கைச்சிறையில்
—– கன்னிமயில் யான் மெய்துறப்பேன்

எண்ணியே விண்ணகத் தாரகை
—– எண்திசை நோக்கி நின்றாள்
மண்ணொளி கதிரோன் மறைய
—– மாலைமகள் மகிழிருள் சூழ்ந்தாள்
கண்ணிமை உலர்ந்து சோர
—– காலத்தோடு கரைந்து கதழ்ந்தாள்
திண்ணியக் காதல் நெஞ்சத்தால்
—– தேன்மொழி இதழாள் கமழ்ந்தாள்

காய்ந்த சருகிடை சலசலத்து
—– காலடியோசை ஊர்ந்து நெருங்க
ஆய்மகள் உணர்வுகள் உச்சத்தில்
—– அனுபவப் புதுமையால் அச்சத்தில்
மாயமாய் பொய்கரம் ஒன்றருங்கி
—– மங்கையின் தோள் பற்றமுனைய
வந்தவன் வேற்றுவனென உணர்ந்து
—– ஈனனை நகங்களால் பிறாண்டினாள்

பூதகன் முரட்டுப் பிடியால்
—– பூமகள் கரங்கள் தணிய
இதயம்வெடிக்க இறுதியாய் அரற்றி
—– கேட்பாரற்றதால் அகன்றிட பணிந்தாள்
அபயம்வேண்டி ஆற்றாமைக் கதறல்
—– ஊடகமின்றி உறுதி நீர்த்தது
கேடயமின்றி புலண்வழி நுகர்ந்து
—– தடையம்கண்டு தலைதெறிக்க ஓடினாள்

வெந்தணல் பற்றிய உடலாய்
—– வெண்மலர் பதறி ஓட
வெறிகொண்ட விரச வேங்கையாய்
—– வக்கிர வினையன் விரட்ட
பதிவதப் பாவையை பதமாய்
—– பாங்கனவன் தாங்கி ஏந்தி
பொங்கனலாய் கனன்றுத் தாக்கி
—– புலைமகனை மண்ணோடு வீழ்த்தினான்

ஆபத்தின் அதிர்வுகள் அகல
—– அங்கை பாத்தியன் கைச்சிறையானாள்
சிபியேந்திய வெண்புறாவாய் சின்னவளை
—– சிரம்நீவி சன்னமாய் கதைத்தான்
பன்னிரு நேரமும் என்னிருவிழிகள்
—– பக்கத்தே பாதுகாவலாய் இருப்பினும்
தன்னுயிரைத் தாமாகக் காத்திட
—– தற்காப்புக்கலை பெண்டீர் கற்றிடவேண்டும்

முடிவான முதல்வன் முடுக்கத்தால்
—– முறையாகக் காப்புக்கலை பயின்றாள்
கடிவான காலம் இனிவரினும்
—– கடித்தகமாய் அதுகாரிகை காக்கும்
குடிகெடுக்கும் குணக் கேடுகளுக்கு
—– வடிவமைத்த தெய்வங்கள் இரங்கும்
படிதாண்டி பணிசெல் பாவையர்க்கு
—– பாதுகாப்புக் கலையே பிரணவமாகும் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »