செந்தமிழ்நா டென்கையிலே செவியருந்தும் தேனே!
செப்பியசீர் பாரதியின் சேதிபடித் தேனே!
எப்படியோர் மொழிக்கிந்த இனிமை? நினைந் தேனே!
பாரதிமுன் என்வினவை
கேட்கவிழைந் தேனே!
வுடன்சற்றே இந்தவிழை
விழியுமயர்ந் தேனே!
தனைக்கனவில் எம்கவிக்கோ
கண்டுவியந் தேனே!
அவனடியைப் அந்தநொடி
பற்றிவிழுந் தேனே!
ஆதுரத்தில் அணைத்தெடுத்த
சிறகுமுளைத் தேனே!
சேமநலம் சிலபொழுதுச்
பேசியிருந் தேனே!
மீசைநயம் சீர்முறுக்கு
பார்த்துமகிழ்ந் தேனே!
பேசியபின் பலகதைகள்
நினைவுமடைந் தேனே!
வினவிவிடத் பாரதியை
திடமுமிகுந் தேனே!
கவிஞனிடம் உலகமகாக்
வினவையொப்பித் தேனே!
சொன்னவிடை உடனவனும்
உணர்ந்துமலைத் தேனே!
செய்தவன்சொல் கலகமிகச்
பதிலுமலைத் தேனே!
கீழதனைக் கற்றவர்க்காய்
கவியினில்தந் தேனே!
நூறுமலர்த் தேனிநாளும்
தேடிச்சென் றோடித்
தேடிவந்துச் சேர்க்குமந்த
நறவுநயம் போலே
ஆனிமுத்து மாலையைப்போல்
அகிலமுள்ள இன்பம்
அத்தனையும் சேர்த்துவைத்த
அதிசயமாய்ச் சீடா!
தாய்மொழியை மானிடர்தம்
மாந்திமகிழ் வெய்வார்!
தாய்மொழியாம் மாத்தமிழ்நம்
நானுமதைக் கேட்கத்
தேனினிமைச் செவியுணர்ந்தேன்!
நாட்டில் தெள்ளுதமிழ்
திரும்புமிட மெங்குமன்றுத்
தமிழ்வழங்கக் கேட்டே
அன்றென்றே பாடிவைத்தேன்
பாவலனுஞ் சொல்லப்
பட்டென்றே கனவுகலைந்
தோடவிழித் தேனே!
புத்தூக்கம் நாடியிலே
ஓடலுணர்ந் தேனே!
ஆங்குடனே நாணமுமே
மேவயிளைத் தேனே!
இச்சகத்தில் பேடியராய்
பிரியமடைந் தோராய்
பிறமொழியில் பேசிமகிழ்
பேதையராய் மக்கள்
கூடிநிற்கு மிற்றையநாள்
தமிழ்நாட்டைக் கண்டே
கூசுகின்ற உள்ளமுடன்
கூனியமர்ந் தேனே!
இளைப்பாறச் சிந்தனையின்
சோலைநுழைந் தேனே!
தமிழ்க்காற்றில் சிற்றலையாய்த்
கவலைதொலைத் தேனே!
பலபுலவர் வந்துதினம்
வளர்தலறிந் தேனே!
வருங்காலம் வண்டமிழின்
ஓர்ந்துகுதித் தேனே!
நிலைமீளும் செந்தமிழின்
சேதிநுகர்ந் தேனே!
சேயோனைச் சீருயரச்
சேர்ந்துதுதித் தேனே!
மலைபொடிக்கும் வந்தவிடர்
வாகுபணிந் தேனே!
மேலணியும் வானவரும்
நீறுமணிந் தேனே!
அயல்மொழியாம் ஆங்கிலமாம்
ஆயிரங்கள் ஆக
அவைவரினும் தமிழ்மகளை
அழித்தலென்ப தில்லை!
படைநடையில் தீங்கவிஞர்
தீம்பெலாமு மோடும்!
தமிழ்மொழிதான் தேயமெலாம்
அரசியென்றே ஆளும்!
உணர்ந்தாற்பின் ஈங்கிதனை
ஏக்கமிழந் தேனே!
இனிமையிலே எம்தமிழின்
மனமுலயித் தேனே!
பாரதியைக் தூங்கியதால்
கண்டுசிலிர்த் தேனே!
பாவலர்க்கும் தூண்டிவிட்ட
நன்றியுரைத் தேனே!
1 Comment
சுந்தரராசன் · நவம்பர் 16, 2016 at 20 h 14 min
நன்றி! எனினும் அடிதோறும் முதலிறு சீர் இடம்மாறியுள்ளதெனத் தெரிவது என் காட்சிப்பிழையா? கண்மயக்கா?