கவிதை
தம்பி… அறிமுகம்
காப்பு
பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்
சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்
உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட
உன்னருளை வேண்டுகி றேன்!
நூல்
அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்
வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே –
(கட்டளைக் கலித்துறை)
பாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே
பாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே
மாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன்
பாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே!
நேரிசை வெண்பா வகை
வண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை
வண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய்
எண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே
விண்ணுலகம் போற்றும் வியந்து
வண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும்
வண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே
விண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை
விண்ணுலகம் போற்றும் வியந்து
எண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும்
எண்ணியே நண்ணுக ஏந்திழை –
கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!
விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்!
» Read more about: கம்பன் புகழைப் பாடு மனமே! »
தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்!
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று வாழும் உயிர்!
சிங்காரத் தண்டமிழின் சீர்கண்டு மெய்சிலிர்க்கும்!
» Read more about: திருப்புகழைப் பாடு மனமே! »
பாரதியார் போலிங்குப் பாரினிலே கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த விற்பன்னன்! – ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத் தங்கத் தமிழாலே!
பொங்கட்டும் இன்பப் பொழில்!
போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு) ஈடான என்றுமவன்!
வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!
தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்!
1.
கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின்
கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்!
புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத்
புலமை தழைக்க உழுகின்றேன்!
2.
விருத்தக் கவிகள் விருந்தென இன்பம்
விளைத்திடும் என்றே..நான் உண்டேனே!
குறள் வெண்பா 10
ஊன்றும் ஒருகோல் உதவுமுன் கைதாங்கி
ஊன்றும் சுமையில் முதுகு
முதுமையின் கூனறிந்து முன்னயரா வூக்கம்
பதுமை யிலைநீ பகர்
தளர்வெனு மோர்நோய் தனதாக்காப் பாட்டி
தளரா வளர்தெங்கு தான்
பிறர்கையை நீநோக்கிப் பின்னே புகாது
பிறர்மெச்சப் பாடுபடப் பீடு
உறவுக ணீத்தாலும் உன்கை உழைப்பில்
உறவதாய்க் கொண்டாய் உயர்வு
தனிமையோ சுட்டாலும் தாங்கும் சுமையின்
இனிமையாய்க் கொண்டாய் உலகு
தோற்றும் முதுமையின் தோற்ற மொருகாட்சி
தோற்சுருக் காயதுவே தோன்று
தன்மானம் கைக்கொள்ளத் தாரணியில் ஏற்றமது
என்னும் முதுமை எழில்
சுடுவெயிலும் தண்மதியும் சேர்த்தொன் றதேகண்
டிடுமுதுமை தான்தளரா தின்று
அச்சமின்றி வாழ்வை அனுபவமா யேந்திவி(டு)
இச்சகத்தில் என்றாய் உணர்ந்து