கதை

கடவுளின் பெயரால்

சூரியன் உச்சியைவிட்டு சாய்ந்திருந்த விஷயம் மேகமூட்ட திரையின் வழியே தெரிந்தது. பசி வயிற்றை கிள்ளுவதால் நீர்ச் சோறாவது சாப்பிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் புறப்பட்டாள். நரித்தொல்லைக்கு பயந்து குட்டியினைத் தனது தோளில் இட்டு கருப்பங்கொல்லை வழியாக ஆடுகளை ஓட்டி வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

கவிதை

சுரதா

சோகமில்லா மன்னனெவன்? அசோகன் என்பார்! சுடுநெருப்பின் தலைவன்தான் ஞாயிறென்பார்! மேகத்தின் எச்சில்தான் மழையாம்! மதுவை அருந்தாமல் மயங்குவதே மாலை நேரம்! ஊகத்தை மொழிபெயர்த்தால் உண்மை யாமோ உன்னுடைய மொழிபெயர்ப்பே பிள்ளை என்பார்! வேகத்தில் எப்போதும் எழுதிடாமல் விரும்புங்கால் எழுதுகிற கவிஞன் என்பார்!

கட்டுரை

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

டீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.

கதை

நாக் அவுட் நாவன்னா

ஊர் வீட்டினால் பெரிய உபயோகம் இல்லை என்றாலும், யாருக்கும் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க மனம் இல்லை. குட்டையோ, நெட்டையோ பஞ்சாயத்தாரை வைத்து ஏழு பங்குகளாகப் பிரித்துத் திருவுளச்சீட்டு போட்டுப் பிரித்துக் கொள்ளலாம் என்ற நாவன்னாவின் யோசனைக்கும் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை கடைசியாக நாவன்னா இப்படிச் சொன்னார், "நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பங்கு வைத்துக் கொண்டால்தான் நல்லது. அதற்கு நீங்கள் யாரும் உடன் படுவதாகத் தெரியவில்லை. இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. வீட்டின் அமைப்புப்படி நான்கு பேர்கள்தான் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளமுடியும்.ஆகவே நம்மில் நான்கு பேர்கள்தான் இந்த வீட்டை வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற மூன்று பேர்கள் விலைவைத்துப் பணத்தை வாங்கிக் கொண்டு வெளியேறிவிட வேண்டியது தான். வேறு வழியில்லை ! "

நூல்கள் அறிமுகம்

‘சுபாஷிதம்’

tamilnenjamமகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி ‘சுபாஷிதம்’ என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா.

முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன்.

 » Read more about: ‘சுபாஷிதம்’  »

கவிதை

மைக்காரி

கண்டும் காணாக் கண்மணியே - போகும் கார ணமென்ன பொன்மணியே ! வண்டு விழியே மோகினியே - நீ வாராய் அருகே மாங்கனியே ! மலரும் வண்டும் பேசுதடி - என் மனதில் காதல் வீசுதடி !

அறிமுகம்

கவிதாயினி மதுமிதா

விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின.

 » Read more about: கவிதாயினி மதுமிதா  »

கவிதை

உழைப்பு

tamilnenjamசொந்த நிலமே யானாலும்
சோற்றுக்காக உழைத்திடனும்
பந்தம் உறவு வலுப்பெறவே
பாசத்துடனே பழகிடனும்
தங்கம் போல் விலைபெறவே
தகுதி நன்றாய் அமைந்திடனும்
விந்தை புரியும் உலகமிது
வினயத் துடனே வாழ்ந்திடனும்

 » Read more about: உழைப்பு  »

கவிதை

நெஞ்சத்தில் வைத்துப் போற்று!

இமிழ்கடல் உலகமதே கிடைத்த போழ்தும் இன்னாத தீயவழி என்றால் ஏற்கான் அமிழ்தமிதே கிடைத்திட்ட போழ்தும் அதை அனைவருக்கும் கொடுத்துண்ணும் அரிய பண்போன் தமிழ்மொழியில் பாடிவந்த புலவருக்கோ தன்தலையைத் தந்துதமிழ் காத்த சான்றோன்

கவிதை

தரணி வாழ்த்திட வா!

நெடுங்கடல் ஓடியும் தழிழ் கூறு செம்மொழி நம்மொழி எனக்கூறு செவிகள் குளிர்ந்திட அதைக்கூறு சிந்தை மகிழ்ந்திடும் விதம்கூறு முது மொழி நம் மொழி மூல மொழி பிறந்தன இதன்வழி பல மொழி இதற்கிணை ஏது ஒரு மொழி செகத்திற் அறிந்த தமிழ் மொழி