ஹைக்கூ திண்ணை 8

எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென்.
சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்…
பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது.
அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும்
கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.

அத்திப்பூ நீரை லத்தீப் நேர்காணல்

மின்னிதழ் / நேர்காணல் வணக்கம். தங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் மூலம் தமிழ்நெஞ்சம் வாசகர்களைச் சந்திப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நெஞ்சம் வாசகர் என்ற முறையிலும் எனது மனமார்ந்த நன்றி. 1. பண்டைய இலக்கியங்கள் இன்றும் பேசப்படுவதற்கான காரணம் என்னவாக இருக்கும்? இலக்கு நோக்கிய படைப்புகள் பண்டைய இலக்கியங்கள் என்பதும், இதயத்தூய்மை படைப்பாளர்களுடையது என்பதும், Read more

சிறுவர் நலன் காப்போம்!

சிறுவர் நலன்கள் காத்திடுவோம் சிறந்து விளங்கச் செய்திடுவோம் மலரும் அந்த மொட்டுகளின் மகிமை அறிந்து  வாழ்த்திடுவோம்! சிறகை விரித்துப் பறக்கட்டும் சின்னஞ் சிறிய சிட்டுக்கள் இடையில் சிறகைச் சிதைக்காமல் இருந்து காப்போம் நாம்அவரை! மொட்டு மலர்ந்து விரிவதற்குள் மூர்க்கர் பறித்து விடுகின்றார் பட்டாம் பூச்சி பறப்பதற்குள் வண்ணச் சிறகை நசிக்கின்றார் கட்டாந் தரையில் முத்துகளை கல்நெஞ் Read more

நாளை நமக்கும் மூப்பு வரும்!

நாளை நமக்கும் மூப்புவரும் நரைக்கும் இளைக்கும் அசதிவரும் இளமைத் தோற்றம் மறைந்துவிட எவர்க்கும் முதுமை வந்துவிடும் முதுமை யாளர் – மூத்தவர்கள் முழுதாய் நமக்காய் உழைத்தவர்கள் இளமை வாழ்வை நமக்கென்றே அன்று தொலைத்த பெரியவர்கள் “பழசு” என்றே அவர்களினைப் பழித்தால் மனசு நோகாதோ? அனுப வத்தால் உயர்ந்திட்ட அறிஞர் தம்மை விலக்குவதோ? தள்ளி வைத்து முதியவரைத் Read more

கவிஞர் விக்டர்தாஸ் நேர்காணல்

மின்னிதழ் / நேர்காணல் ஆளும் வளர்ந்தவர் அறிவும் வளர்ந்தவர் அன்பெனும் தேசத்தில் நாளும் வளர்ந்தவர் தாளும் கோலும் கையில் கிடைத்தால் தாங்கா திவரின் தமிழ் விளையாட்டு ஆளிவர் அனுதினம் ஆக்கிடும் படைப்பு ஆகா சத்தின் சூரிய வெளுப்பு பாலும் கசக்கும் பழமும் புளிக்கும் பாயிவர் எழுதினால் பக்கங்கள் இனிக்கும்! உருவங் கறுப்பு உள்ளம் வெளுப்பு உயிர்திடும் பொழுதிவர் Read more

சிங்களப்பாடகி ஓலு வசந்தி

மின்னிதழ் / நேர்காணல் இலங்கைப் பாடகர்கள் வரிசையில் தனக்கென ரசிகர்கள் கூட்டமொன்றையும் ஈர்த்தெடுத்து வலம் வரும் ஓலு வசந்தி ஒரு சிங்கள மொழிப்பாடகியாக மட்டுமல்லாமல் ஒரு ஓவியராகவும் மிளிர்கிறார். பன்முகத் திறமைகள் கொண்ட அவர், தமிழ்நெஞ்சத்துக்காக மனம் திறந்து தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தருணம். வாருங்கள் ஓலு வசந்தியை அறிந்துகொள்வோம்… நேர்கண்டவர் வஃபீரா வஃபி அக்டோபர் 2021 Read more

பாவலர் வள்ளிமுத்து நேர்காணல்

எல்லோரும் கொரானா தொற்று காலத்தில் உள்ளோம். அதனால் உங்க ளுக்கே உள்ள தொனியில் கவித்துவத் தோடு மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்குங்களேன்.?

வல்லவனுக்கு வல்லவனை இயற்கை உரு வாக்கிக் கொண்டே இருக்கும்..ஆம் பெரிய உயிருக்கும் சிற்றுயிருக்கும் இடையேயான போராட்டமே உலகியல்..

அளவு மீறிப் பெருகும் உயிர்களை இயற்கையே அழித்துச் சமநிலைப் படுத்திவிடும்..இந்த வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணியிரிகளுக்கும் மனிதனுக்குமான போராட்டம் இப்போதல்ல காலகாலமாக நடப்பதுதான்..

பாவலர் வையவன்

மின்னிதழ் / நேர்காணல் “எமக்குத் தொழில் கவிதை; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பான் பாரதி. ஆசிரியப் பணி, ஆனைமுத்து ஐய்யாவுடன் இயக்கப் பணி என தீவிரமாக இயங்கிய வையவன் அப்பணிகளுக்கிடையே அதன் நடுவே பத்து கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அறம் சார்ந்த நேர்மையான வாழ்வு என்பது இலட்சியம். எந்த வெளிச்சத்தையும் போலிமையையும் விரும்பாத பாவலர் வையவன் ‘மனத்துக்கண் Read more

ஹைக்கூ திண்ணை 7

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும்.

அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி

‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

திருப்பூரைச் சேர்ந்த மலையேறும் மகளிர்

மின்னிதழ் / நேர்காணல் செல்வி திருப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். தற்பொழுது பிரிட்டனில் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். அவருடைய வேலை நேரம் போக மீதி நேரங்களில் தொலைதூரம் நடப்பது, தொடர்ந்த விடுமுறைகளில் ரிஸ்க் எடுத்து மலையேறுவதனைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். வாழ்வின் வசந்தத்தை, வெப்பத்தை ஒருசேர பார்க்கும் அனுபவிக்கும் தருணங்கள் இவை என அழகாகச் சொல்கிறார். அவரின் Read more