கவிதை

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன்
வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே !
பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன்
பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே !

அலங்கார நடைபோடும் தேவதையே –

 » Read more about: அம்மனைத் தேடும் அழகுரதம்  »

கவிதை

வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு
என்நெஞ்சில் வந்தவன்
திருமகன் என்று வருவான்

கார்கொண்ட வண்ணமும்
கனியிதழ் வாய்கொண்டு
கனிமுத்தம் என்று தருவான்

நேர்கொண்ட வீரமும்
கொடை அன்புகொண்டவன்
நிம்மதி என்று தருவான்

போர்கொண்ட வேங்கையாய்
புறங்காணா வேந்தனாய்
புலியாக வாழும் வீீரன்

சீர்கொண்டு வருவானோ
சிலையாநான் வாடி
சிந்தையில் அவனை வைத்தேன்

பார்வென்று தார்மாலை
சூடிவரும் போதிலே
பரிசொன்று நான் சூடுவேன்

 » Read more about: வேங்கையாய் வீரனாய் வருவான்  »

கதை

நன்றி மறந்த சிங்கம்

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.

அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.

“மனிதனே பயப்படாதே!

 » Read more about: நன்றி மறந்த சிங்கம்  »

By Admin, ago
கவிதை

அன்புள்ள நண்பிக்கு

அன்பெனும் சொல்லுக்கு
அகராதியை விஞ்சிய
அர்த்தம் நீ …

உன் கைப்பிடி அழுத்தங்கள்
உதிர்ந்து போன நாட்களை
உயிர்ப்பித்து தந்தது….

தலை வருடிய சுகம்
தாயினன்பை என்னுள்
தடவிச் சென்றது…

 » Read more about: அன்புள்ள நண்பிக்கு  »

கவிதை

அக்னிச்சிறகு

அப்துல் கலாம்
இந்தியத் தாயின் முகம்.
இந்தியாவின் முகவரி.
நம் நாட்டின்
வடக்கே இமயமலை
கிழக்கே அப்துல் கலாம்.

நடமாடிய விஞ்ஞானம்
தந்தை தெரஸா
இந்தியாவின் ரியல்
சூப்பர் ஸ்டார்.

 » Read more about: அக்னிச்சிறகு  »

கதை

காத்திருப்பு

பிரண்டு படுத்த படுக்கையிலே தடவிப் பார்த்த கைகளுக்குத் தட்டுப்படாத மனைவி தேகம் உணர்ந்து துடித்தெழுந்தான் விஜய்.

என்ன செய்கிறாள் இவள். இன்னும் நித்திரை கொள்ளாமல் அவன் கைபட்டு மின்சாரம் தொழிற்பட்டு மின்விளக்கு வெழுத்தது.

 » Read more about: காத்திருப்பு  »

கவிதை

வாலிபக் கவிஞர் வாலி

( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! )

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன்
தமிழரை கலங்க வைத்தான் இன்றோ
நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் !

 » Read more about: வாலிபக் கவிஞர் வாலி  »

கவிதை

வாலி நீ வாழி!

நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை
பாக்குச் சுண்ணாம்புடன்
நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்!

ஒற்றை வரிகளில்
ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப்
பாக்களில் புதைத்தவனின்
உடல்தான் புதைக்கவோ
எரிக்கவோப் பட்டிருக்கலாம்;

 » Read more about: வாலி நீ வாழி!  »

கதை

கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?

வாசல் கதவை விரைவாய்த் திறந்து ஓடி வந்த பவித்ரா, விசையாகத் தன் கைப்பையைச் சுழற்றி எறிந்தாள். கட்டிலில் சடாரென்று விழுந்தாள். வெம்மி நின்ற அழுகை வெடித்தது. அடக்கமுடியாத கண்ணீர் மடை வெள்ளம் திரண்டதுபோல் தாரைதாரையாகத் தலையணையை நனைத்தது.

 » Read more about: கண்ணுக்கு ஏன் கறுப்புக் கண்ணாடி?  »