அன்பெனும் சொல்லுக்கு
அகராதியை விஞ்சிய
அர்த்தம் நீ …

உன் கைப்பிடி அழுத்தங்கள்
உதிர்ந்து போன நாட்களை
உயிர்ப்பித்து தந்தது….

தலை வருடிய சுகம்
தாயினன்பை என்னுள்
தடவிச் சென்றது…

நூற்றாண்டு கால
நட்பை நொடிப்
பொழுதுகளில் தந்த
மாயக்காரி நீ…

அன்பான கவனிப்பு
ஆறுதலான வார்த்தைகள்
அறிவான பேச்சு…
உன்னில் வியக்க
ஏராளம்!தாராளம்!

மொத்தமாகவும்
சில்லறையாகவும் உன் அன்பு
எனக்கு மட்டுமே கிடைத்திட
வேண்டும்!
அன்பில் நானோர் பேராசைக்காரி!

எனக்கென்றால்…..
சரியான நேரத்தில்
சரியாக கிடைத்த
சன்மானம் நீ…

மீண்டும் வருவேன்…
முடியாத கதைகள் பேசி
முழுவதுமாய் என்னை நீ
மூழ்கடித்த உன் அன்புக் கடலில்
முத்துக் குளிக்க
மீண்டும் வருவேன்..
இறைவன் நாடினால்…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.