கவிதை

வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு
என்நெஞ்சில் வந்தவன்
திருமகன் என்று வருவான்

கார்கொண்ட வண்ணமும்
கனியிதழ் வாய்கொண்டு
கனிமுத்தம் என்று தருவான்

நேர்கொண்ட வீரமும்
கொடை அன்புகொண்டவன்
நிம்மதி என்று தருவான்

போர்கொண்ட வேங்கையாய்
புறங்காணா வேந்தனாய்
புலியாக வாழும் வீீரன்

சீர்கொண்டு வருவானோ
சிலையாநான் வாடி
சிந்தையில் அவனை வைத்தேன்

பார்வென்று தார்மாலை
சூடிவரும் போதிலே
பரிசொன்று நான் சூடுவேன்

 » Read more about: வேங்கையாய் வீரனாய் வருவான்  »