எண்சீர் விருத்தம் (மரபுப் பா)
————————————-
விளம் – விளம் – மா – தேமா
விளம் – விளம் – மா – தேமா

துன்பமோ பிறர்க்கிலா தாகு மாயின்
…… துயரமோ வெனக்கிலை யென்று நெஞ்சம்
இன்பமே கொள்ளுமோர் மாந்தர் தம்மின்
…… இதயத் துள்ளொளி பெருகித் தானும்
தன்னல மிலாதநல் குணத்தா லிங்கே
…… தாரணி யிதுவுமு யருமா மன்றோ
இன்னுயிர் நீத்திடற் பின்னும் நாமம்
…… நிலைத்திட வாழ்வார வருமிப் பாரில்

பொன்னிலே மண்ணிலே பெண்ணி லாசை
…… புகுந்திடா மனதிலே நல்ல வெண்ணம்
தன்னல மிறந்துதங் குமுளம் மீதில்
…… தங்கியே யிறையவ னறத்தைத் தூண்டி
மன்னியும் படியான மமதை யில்லா
…… மனமதை நல்கியே மாநில முய்ய
எண்ணுவா றிறப்பிலு மிங்கே வாழ
…… ஏற்றமே கண்டவ ருறவாய் சூழ்வர்

பிறர்நல மீதிலக் கறையு ளோராய்
…… பிறர்க்கேயா கவாழுவோ ரிங்கே என்றும்
பிறர்நிலை கண்டவ ரேங்கி நாடி
…… பிறர்மன மோமகிழ்ந் திடுமா றேயாம்
அறங்களைச் செய்தவர் களேதான் பாரில்
…… அன்பினிற் குறைவிலா தாண்டு நாளும்
இறப்பிலு மிங்கவ ரோயெம் முள்ளம்
…… இருந்துதா னவருமே இங்கு வாழ்வார்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.