குடும்பம்

பொய்சொன்ன தாய்!

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன்   தன்னுடைய சிறிய மகனிடம்
கேட்கிறான்..

“உன்னுடைய இப்போதைய அம்மா
எப்படி?”என்று.

அப்போது அந்த மகன் சொன்னான் .

 » Read more about: பொய்சொன்ன தாய்!  »

ஆன்மீகம்

பாரதியும் இஸ்லாமும்

“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’

 » Read more about: பாரதியும் இஸ்லாமும்  »

By மாலன், ago
குடும்பம்

வாழ்வின் பூதாகாரம்

2016-11-27-00-12-48“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது

அதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல் ”

இவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை,

 » Read more about: வாழ்வின் பூதாகாரம்  »

By கௌசி, ago
புதுக் கவிதை

பெண்ணியம் போற்று

படைத்தான் உன்னை கடவுள்
கிரங்க வைத்தாய் என்னை!

உன்னை
உரசிக்கொண்டு
வந்திருக்க வேண்டும்
மென்மையானது காற்று
ஜன்னல் ஓரத்தில்.

ஆழம்தான் உன்னின்
தெரியவில்லை!

 » Read more about: பெண்ணியம் போற்று  »

புதுக் கவிதை

யே ராசா ராசா…

இசைப்பாடல்

யே ராசா ராசா
என் நெஞ்சுக்குள்ளே
வந்து நீயும்
என்னை யென்ன
யென்ன செய்யப் போகிறாய்?

தினம் லேசா லேசா வந்து
என்னைத் தொட்டு
எங்கே நீயும் போகிறாய்?

 » Read more about: யே ராசா ராசா…  »

மரபுக் கவிதை

கருது விளைஞ்சிருக்கு!

நெல்லும் விளைஞ்சிருக்கு
நெஞ்சும் நிறைஞ்சிருக்கு!
அல்லி மலருவொன்னு
அங்கே பூத்திருக்கு!
துள்ளும் அழகிருக்கு
தூண்டில் கண்ணிருக்கு
அள்ளி அணைப்பதற்கு
ஆசை மிகுந்திருக்கு!

வரப்பு வயலோரம்
வசந்தம் அமர்ந்திருக்கு
கருப்புக் குயிலுவொன்னு
காத்துத் தவமிருக்கு!

 » Read more about: கருது விளைஞ்சிருக்கு!  »

மரபுக் கவிதை

சொர்க்கத்தைத் தந்தாயடா !

சாமத்தில் எழுந்து
காமத்தில் நுழைந்து
மோகத்தை விதைத்தாயடா – இரு
போகத்தை அறுத்தாயடா.

வேகத்தில் மிதந்து
சோகத்தை மறந்து
தேகத்தை வதைத்தாயடா – என்
தூக்கத்தைக் கெடுத்தாயடா.

 » Read more about: சொர்க்கத்தைத் தந்தாயடா !  »

மரபுக் கவிதை

பாடிப் பறந்த குயில்!

பாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம்

தமிழ் வணக்கம்!

தென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித்
தேனாற்றில் நீராடும் தமிழே!
என்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி
இழைத்தூட்டுத் தித்திக்கும் அமுதே!

 » Read more about: பாடிப் பறந்த குயில்!  »

மரபுக் கவிதை

எல்லோரும் வெல்வோம்

சொத்துக்கள் சேர்ப்பதுவே வெற்றி யன்று
சொந்தங்கள் சேர்ப்பதுவும் வெற்றி யன்று
எத்தனைநாள் இப்புவியில் வாழ்ந்தோம் என்னும்
எண்ணிக்கை வெற்றியன்று வாழும் நாளில்
எத்தனைபேர் வாழ்வதற்கே உதவி செய்தோம்
என்பதுதான் வெற்றிக்குத் துலாக்கோல் தம்பி
செத்தபின்னர் இவன்போல யாருண் டென்ற
சேமிப்பே நிலையான வெற்றி யாகும்.

 » Read more about: எல்லோரும் வெல்வோம்  »

கட்டுரை

பாபருக்கும், ராமருக்கும் பகைமை என்ன?

ஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்த போது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். “எண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா,

 » Read more about: பாபருக்கும், ராமருக்கும் பகைமை என்ன?  »