கவிதை

பொங்கலோ பொங்கல் ..!

ஏர் தந்த சீதனத்தை பார் கண்ட எளியவர்க்கு கார் கொண்ட உள்ளத்தால் சீர் கொண்டு பகிர்ந்தளித்து பொங்கிடும் அவர் புன்னகையில் புதுப் பொங்கல் சமைத்திடுவோம் !!!

மரபுக் கவிதை

சொல்வாய் நீயே!

மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன்
மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே!
கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன்
கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே!

அதிகாலைத் துயிலெழுந்த அழகியே –

 » Read more about: சொல்வாய் நீயே!  »

கவிதை

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே !

கவிதை

நிலம்வணங்கும் பொங்கல்

மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது

கவிதை

வண்டமிழை வாழ்த்திடுவோம் தோழர்களே!

உழைக்கின்ற வன்கைகள் உயர்வுகளைப் பெற்றிடவே விழைந்தெழுந்து ஒற்றுமையாய் வென்றிடுவோம் தோழர்களே! அலைபாயும் கடல்தனிலே அணையாத விளக்காவோம்! நிலையற்றோர் வாழ்ந்திடவே நெறிபடைப்போம் தோழர்களே!

கவிதை

மனிதனை நினைத்தால்

பிறர் குறைகளைச் சுட்டிக் காட்டுவதில் வேறு எந்த உயிர்களும் அவனை வென்றதாக வரலாறு கிடையாது என்பதால்! அவன் தன் பிழைகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை!

கவிதை

பாவேந்தனே மீண்டும் வா வேந்தனே

சாதிமதப் பேய்களுக்கு எதிராய் நின்றான் சவக்குழியைத் தோண்டிஅதைப் புதைப்போ மென்றான்! பாதிவழிப் பயணத்தில் துணைஇ ழந்த பாவையர்க்கு மறுவாழ்வை அமைப்போ மென்றான்! நீதிவழிக் காதலுக்குத் தடைகள் செய்யும் நீசருக்கு எரிமலையாம் இவரின் தோற்றம்! நாதியற்ற இனம்போல தமிழர் வீழ்ந்தார் நடுவழியில் இவன்பாட்டால் எழுந்து நின்றார்!

கவிதை

தமிழ்நெஞ்சம் அமின் வாழ்க!

கன்னல் கவியழகில் காதல் பெருக்கெடுத்து மின்னும் தமிழ்நெஞ்சம் இன்னமினார்! - மன்னுபுகழ் பின்னும் நிலையுறுக! பேறுகள் பெற்றோங்கி இன்னும் கலையுறுக ஈங்கு! அன்பின் பெருக்கால் அனைவரையும் ஆட்கொள்ளும் இன்பத் தமிழ்நெஞ்சம் எம்அமினார்! - நன்வாழ்கை அன்னை மொழியேந்தும்! முன்னை நெறியேந்தும்! பொன்னை அகமேந்தும் பூத்து!

கவிதை

முனைவர் தமிழண்ணல் கையறுநிலை

வல்லதமிழ் ஓங்க வரலாற்றை நன்காய்ந்து நல்லபுகழ் நுால்களை நல்கியவர்! - வெல்லுதமிழ் அண்ணல் மறைந்திட்டார்! ஐயகோ! அன்பருளக் கண்ணீர்க் கடலெனக் காண்! ஓங்கும் தமிழணிக்கே ஒப்பில் தலைமையினைத் தாங்கும் மறவர் தமிழண்ணல்! - ஈங்கெழா நீடுதுயில் கொண்டதுமேன்? ஐயோ!தன் நெஞ்சுடைந்து பாடுகுயில் தேடும் பறந்து!

கவிதை

தாய்க்கொரு மடல்

எஜமானின் வீட்டு கனவான்களுக்கு சமைத்துத்தான் கொடுக்கின்றேன் வயிற்றுப் பசியாற்றவும் உடற் பசியாற்றவும் என்னைத்தான் நாடுகின்றான் ஒருவன் மாறி ஒருவன்! செத்துப்போன உடலுக்குள்ளே ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன் கலங்கிவிடாதே தாயே...!