பகிர்தல்

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி

வரம்போடு தம்வாழ்வை
    வகுத்தளித்து வாழ்ந்துவந்த
பெரம்பலூரில் பிறந்திட்ட
    பெருவைரம் இராமதாசு,
உரமாக இருந்துவந்து
    உயர்வான சிற்றிதழைத்
தரமான எழுத்துகளால்
 

 » Read more about: சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!  »

புதுக் கவிதை

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை
சீதனமாய் பெற்றன்று
வெண்ணிறத்தோலுடையான்
விட்டுசென்ற பசுமை நீ…

பன்னிற மொழியுடையோர்
பாரதநிறம் சேர்த்து
கண்ணிறச் சக்கரம் சுழன்ற
காண்போரின் முத்திரை நீ…

 » Read more about: சுதந்திரம்  »

புதுக் கவிதை

அவன் என் மூத்த சகோதரன்

அவனை நான் அக்கா
என விளிப்பது அவனுக்கு பிடிக்கும்.

அவன் என் மூத்த சகோதரன்.

கொஞ்சம் கொஞ்சமாக
பெண்ணாகிக் கொண்டிருந்தான்.

படுக்கையில் விலகித்தெரிந்த
அவன் கொலுசுக் கால்களை
பார்த்துவிட்டு முதன்முதலில்
அதிர்ச்சியானவன் நான்தான்.

 » Read more about: அவன் என் மூத்த சகோதரன்  »

புதுக் கவிதை

நேற்று பெய்த மழையில்…

நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த கவிதை

மழை வெவ்வேறு
காலங்களில் பெய்தாலும்
என் இறந்த காலத்தைத்தான்
ஈரமாக்கிவிட்டு போகிறது

ஒற்றைக் குடை
இருவர் பயணம்
அனாதை சாலை
சீதளக்காற்று மெல்லிய உரசல்
பகல் இரவு
புணர் பொழுது

சொர்க்கம் பற்றிய
சந்(தேகம்) தீர்ந்தது
இன்றோடு!

 » Read more about: நேற்று பெய்த மழையில்…  »

By ஆயுதா, ago
புதுக் கவிதை

மது குடிக்கும் உயிர்

மதுவுடைய பிடியினிலே
மயங்குகிற அடிமையே!
எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய்;

மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்திலே நீயிருப்பாய்;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை;

இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும்;

 » Read more about: மது குடிக்கும் உயிர்  »

புதுக் கவிதை

பிராணவாயு நீ !

சுவாசிக்கும் காற்றில்
கரியமிலவாயு நான்,
பிராணவாயு நீ!

பருகும் நீரில்
ஹைட்ரஜன் நான்,
ஆக்சிஜன் நீ!

எரியும் விளக்கில்
வெப்பம் நான்,

 » Read more about: பிராணவாயு நீ !  »

நூல்கள் அறிமுகம்

உன் முகமாய் இரு

உன் முகமாய் இரு.

மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு.

 » Read more about: உன் முகமாய் இரு  »

மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 5

கம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார்.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 5  »

சிறுகதை

தாய்மை

“என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கும் இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க”

“என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி… நீ ஏன் டென்சனாகுற…

 » Read more about: தாய்மை  »