கவிதை

சிவந்த மகள்

எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…

பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…

நாக்கு நீட்டு மாமான்னு…

 » Read more about: சிவந்த மகள்  »

கவிதை

காட்டழகி! என் வீட்டழகி!

நாவல் பழ நிறத்தழகி
நாயுருவிக் கண்ணழகி-நான்
ஆவல் படும் அழகெல்லாம்
அடங்கி நிற்கும் பேரழகி

சேவல்க்கோழி கொண்டையென
சிவந்திருக்கும் உதட்டழகி-உன்
பாலைப்பழச் சொல்லுக்கு
காளை மனம் ஏங்குதடி!

 » Read more about: காட்டழகி! என் வீட்டழகி!  »

கவிதை

சூனியப்புள்ளி

அந்த சூனியப்புள்ளிக்கு
இப்போது சில வருடங்கள்
வயதாகிறது

வளர்ந்து பருத்த அதற்கு
அற்ப ஆயுள் இருக்க
கூடாதா என நான்
கேட்டுக்கொள்கின்றேன்

ஒரு உறுதியான
நிலைத்த புள்ளியில்
வாழத்தெரிந்த அதை
பார்த்து வியக்கின்றேன்

என்னோடு வாழ்ந்து வளர்ந்து
எனக்கே போட்டியாகும்
என் நிழலென
வளரும் அதற்கும்
என் ஆயுள் வரை தான்
வயதாகும்
சந்தேகமே இல்லை

 » Read more about: சூனியப்புள்ளி  »

கவிதை

இன்னொரு அவள்

60453மாறி கால இரவொன்றில்
பிரயத்தனமின்றி சுமக்கும்
மிகையான குளிரில்

அவள் நிர்மலமான
நொடிகளை ஒவ்வொன்றாய்
கடக்கும் போது

தனிமைத் தீர்க்க வந்த
இன்னொரு அவள்

கவிதைகள் பற்றிய
கோணங்களை வட்டங்களுக்குள்
அடக்குகிறாள்

சில்லரைத்தனமான
சொற் சேர்க்கை வெறும்
பேச்சுகள் என்றும்

அகராதி மறைத்த
செறிவான பதங்கள்
கொண்டு ஆழந்த
அர்த்தங்களாயும்
சிலேடைகளாயும்
மர்மங்களாயும்
சுருக்கியும் விரித்தும்
சுவாரசியமாகவும்

புனைவதன் சிறப்பை
விபரித்துக் கொண்டே

அவள் சொல்லும் கவிதையை
நான் எழுதிக்கொண்டிருந்தேன்

முடிவில் சிறந்த கவிக்கான
பட்டத்தை நான்
வாங்கிக் கொண்டிருக்க
இன்னொரு அவளான அவள்
எனக்குள் அடங்கி
குதூகலித்துக் கொண்டிருந்தாள்

 » Read more about: இன்னொரு அவள்  »

கவிதை

உழைப்பு

மலர்பறிக்கும் கைகளில்
மண்வெட்டி , என்றும்
மணம்பரப்பும் தலையில்
கல்சட்டி , விரிந்து
மைவைக்கும் கண்ணில்
புதுமிரட்சி , புதிதாய்
நகைவைக்கும் இதழில்
நாவறட்சி ,

 » Read more about: உழைப்பு  »

கவிதை

உன்ன யெண்ணி ஏங்க வச்சே

நான் கோயிலுக்கு
நடந்து போகயிலே

எந்தன் எதிரே வந்து
தரிசனம் தந்தவளே

நான் முதல் முதலா
உன்னை பார்த்தேன்

எந்தன் விழிகளிலே
உன்னை சேர்த்தேன்

காதலோடு பூவெடுத்து
பூமாலை கோர்த்தேன்

நெத்தியில நீதானே
பொட்டு ஒன்னு வைச்சே

ஊசி நூலு இல்லாம
ஏன்டி எம்மனச தைச்சே

ஏறெடுத்து பார்த்தில்ல
நான் இதுவரை பெண்ணே

தினமும் உன்னயெண்ணி
ஏங்க வச்சே ஏன்டி கண்ணே!

 » Read more about: உன்ன யெண்ணி ஏங்க வச்சே  »

கவிதை

நம்முறவின் பரிணாமம்

திரும்பி எடுக்க முடியா
உன் ப்ரியங்கள்
மனக்குகைக்குள் அமிழ்ந்து
விட்ட சந்தங்கள்..
காதல் இங்கு நம் மந்திரம்
விதி வரைந்ததோ நம் பந்தம்..

மனக்காயத்தை ஆற்றுகின்ற
மகிழ்வான பொழுதுகள்
நம் உறவின் சாட்சிகள்
என்றும் மாறாத காட்சிகள்..

 » Read more about: நம்முறவின் பரிணாமம்  »

கவிதை

சொக்குப்பொடி

சுண்ணப்பொடி சுகந்தப்பொடி
சுந்தரியின் எண்ணப்படி.
வண்ணப்பொடி வசந்தப்பொடி
வந்திருக்கும் சொர்ணப்பொடி.

கோலப்பொடி கொஞ்சும்படி
குலமகளை விஞ்சும்பொடி,
சாயப்பொடி சாந்துப்பொடி
சரியவைக்கும் சந்தனப்பொடி.

மஞ்சள்பொடி மகிழும்படி
மங்கைப்பூச மருதாணிப்பொடி,

 » Read more about: சொக்குப்பொடி  »

கவிதை

ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள்

மாங்கனி தாங்கிய மங்கை -இவள்
மதுத்துளி இதழில் தேங்கிய கங்கை
தேன் கனி தடவிய கன்னம்
ஆண் கனி தேடுற வண்ணம்

விழிகளிரண்டும் கணைகள் பாய
புது கவிதை சொல்லும்
மெல்லிடையில் உடைகள்
தழுவக் கண்டால்
விரல்கள் கவலை கொள்ளும்

செவ்விளநீர் தங்குமிடம்
பொங்கி வரும் தங்க குடம்
தங்கிவிட மெய் மறந்து
ஐம்புலனை தூண்டிவிடும்
நங்கையிவள் ஒரு தேன் கவிதை

 » Read more about: ஐம்புலனை தூண்டிவிடும் நங்கையிவள்  »

கவிதை

கவலைக்குரிய காலமாற்றம்!

ஒற்றைச் சேலையில்
தாலாட்டுக் கேட்ட
ஒருதாய் வயிற்று
உறவுகளெல்லாம்
ஒன்றுவிட்ட
சகோதரர்கள் போலானது !

ஒரு பாயில்
தூக்கம் பகிர்ந்த
ஒன்றுவிட்ட சோதர
சொந்தங்கள் தூரத்து
உறவு என்றானது!

 » Read more about: கவலைக்குரிய காலமாற்றம்!  »