பசி

வெட்கம் என்பது எனக்கும் உண்டு தான்..! என் வயிறு தான் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.. உலகமும் ஏற்காததை போல்..! மூக்கைத் துளைக்கும் வாசனை மிக்க விருந்துகளையா கேட்கிறேன்..?? ஓரிரு ரொட்டித் துண்டுகள் இருந்தாலும் போதும் என் விருந்துக்கு..! பிச்சை கேட்கவும் தன்மானம் அடகு போக மறுக்கிறது..! நான் என்ன செய்ய அச்சமும் நாணமும் பிறவி தந்த பரிசுகள் தானே.. நல்ல குலத்தில் வேறு பிறந்து விட்டேன் அதனால் திருட்டுப் Read more

சூனியப்புள்ளி

அந்த சூனியப்புள்ளிக்கு இப்போது சில வருடங்கள் வயதாகிறது வளர்ந்து பருத்த அதற்கு அற்ப ஆயுள் இருக்க கூடாதா என நான் கேட்டுக்கொள்கின்றேன் ஒரு உறுதியான நிலைத்த புள்ளியில் வாழத்தெரிந்த அதை பார்த்து வியக்கின்றேன் என்னோடு வாழ்ந்து வளர்ந்து எனக்கே போட்டியாகும் என் நிழலென வளரும் அதற்கும் என் ஆயுள் வரை தான் வயதாகும் சந்தேகமே இல்லை

இன்னொரு அவள்

மாறி கால இரவொன்றில் பிரயத்தனமின்றி சுமக்கும் மிகையான குளிரில் அவள் நிர்மலமான நொடிகளை ஒவ்வொன்றாய் கடக்கும் போது தனிமைத் தீர்க்க வந்த இன்னொரு அவள் கவிதைகள் பற்றிய கோணங்களை வட்டங்களுக்குள் அடக்குகிறாள் சில்லரைத்தனமான சொற் சேர்க்கை வெறும் பேச்சுகள் என்றும் அகராதி மறைத்த செறிவான பதங்கள் கொண்டு ஆழந்த அர்த்தங்களாயும் சிலேடைகளாயும் மர்மங்களாயும் சுருக்கியும் விரித்தும் சுவாரசியமாகவும் புனைவதன் சிறப்பை விபரித்துக் கொண்டே அவள் சொல்லும் கவிதையை நான் எழுதிக்கொண்டிருந்தேன் Read more